இயேசு கடவுளா? பாத யாத்திரைக்கு இடையே.. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிடம் டவுட் கேட்ட ராகுல் காந்தி!
கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி இருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஏசு கடவுளா இல்லை கடவுளின் மகனா என்பது குறித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் நடத்திய உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து நடை பயணத்தை தொடங்கிய அவர், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 48 நாட்கள் 3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.

ராகுல் காந்தி
இந்நிலையில் கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி இருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஏசு கடவுளா? இல்லை கடவுளின் மகனா? என்பது குறித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் நடத்திய உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ராகுல் காந்தி தனது நடை பயணத்தின் ஒரு பகுதியாக கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உள்ளிட்டவர்களுடன் பேசினார். அப்போது இயேசு கடவுளா என கேட்டார்! அதற்கு சார்ஜ் பொன்னையா இயேசு கடவுள்தான் என கூறினார்.

இயேசு கடவுளா?
'இஸ் ஜீசஸ் இஸ் எ ஃபார்ம் ஆஃப் காட் ஆர் சன் ஆஃப் காட்' அதாவது கடவுளின் உருவமா அல்லது கடவுளின் குழந்தையா என கேட்டார் கடவுளின் உருவம் எனறோ, கடவுளின் குழந்தை என்றோ இயேசு கிறிஸ்துவை சொல்ல முடியாது அவர் அனைத்தும் சேர்ந்தவர். சாதாரணமானவர்களைப் போல மனிதன் மனிதன் இணைந்து இயேசு பிறக்கவில்லை. அவர் கடவுளின் உருவமும் கிடையாது. அவர்தான் கடவுள் எனக் பாதிரியார் கூறினார்.

விவாதம்
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் யார் இந்த ஜார்ஜ் பொன்னையா எனவும் சமூக வலைதளங்களில் காரசார விவாதம் தொடங்கி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்ச்சை பேச்சு ஒன்றில் சிக்கி சிறைக்குச் சென்றவர் தான் இவர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாதிரியார் ஸ்டோன்ஸ் சுவாமி நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய இவரை அருமனை போலீசார் கைது செய்தனர்.

ஜார்ஜ் பொன்னையா
இந்து மத உணர்வுகளை புண்படுத்தி பேசியதாக ஜார்ஜ் பொன்னையா தேடப்பட்டு வந்த நிலையில் மதுரை கருப்பாயூரணி பகுதியில் கைது செய்யப்பட்டார். அதாவது அந்த கூட்டத்தில் பேசியிருந்த சார்ஜ் பொன்னையா தமிழகத்தில் திமுக ஆட்சி மலர கிறிஸ்தவர்களே காரணம் எனவும் திமுக ஆட்சி நாங்கள் போட்ட பிச்சை எனக் கூறியிருந்தார். மேலும் நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி பூமித்தாயை மதிப்பதாக சொல்லி செருப்பு போடாமல் இருப்பது அமைச்சர் மனோ தங்கராஜ், சேகர் பாபு ஆகியோர் இந்து ஆலயங்களுக்கு செல்வது ஆகியவற்றையும் விமர்சித்து பேசியது சர்ச்சையானது.

சர்ச்சைப் பேச்சு
இது குறித்த வழக்கில் மத நம்பிக்கையை சீர்குலைத்தல் இரு பிரிவினிடையே மோதலை உருவாக்குதல் பிரிவினையை தூண்டுதல் உள்ளிட்ட குற்ற பிரிவுகளின் கீழ் ஜார்ஜ் பொன்னையா மீது வழக்கு பதிவு செய்தது செல்லும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் தான் கன்னியாகுமரி வந்திருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வழக்கு நடவடிக்கைகள் சிக்கி இருக்கும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவினை சந்தித்து பேசி இருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆதரவும் எதிர்ப்பும்
ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடத்தி வரும் ராகுல் காந்தி இரு பிரிவினிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசிய ஜார்ஜ் பொன்னையாவுடன் பேசியது ஏன் எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் ராகுல் காந்தி பாதியார்களை சந்தித்து பேசுவது அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications