கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்றும் நாளையும் அதி கனமழை.. வெள்ளக்காடான கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றால் அந்த மாவட்டத்தில் கனமழை பெய்து வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வராத வரலாறுகள் இருந்த போதிலும் இந்த முறை வெள்ளம் வந்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள்.

இன்றும் நாளையும் அதி கனமழை.. வெள்ளக்காடான கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட் இன்றும் நாளையும் அதி கனமழை.. வெள்ளக்காடான கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்

வாழ்வாதாரம்

வாழ்வாதாரம்

ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான இடங்களுக்கு பணிச் சென்றவர்கள் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சொல்லப்பசுகிறது. வாழைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

வேதனை

வேதனை

ஒக்கி புயல் உள்ளிட்ட காலங்களில் கூட இது போல் வெள்ளம் ஏற்படவில்லை என சிலர் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் இன்றும் நாளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில இடங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

செய்திக் குறிப்பு

செய்திக் குறிப்பு

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்புத்தூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானம் ஓரளவு மேகமூட்டம்

வானம் ஓரளவு மேகமூட்டம்

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருக்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுவதால் அந்த பகுதியில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Red alert warning issued for Kanyakumari district as there will be very heavy rainfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X