உறுப்பு வெந்து இறந்த பிஞ்சு.. காரணம் "அவங்களா".. கேமரா ஒயரை எலி கடிச்சிடுச்சாமே.. குமரியில் மர்மம்
6ம் வகுப்பு மாணவனை கூல்டிரிங்ஸ்ஸில் ஆசிட் கலந்துதந்து கொன்றவர்கள் யார்
கன்னியாகுமரி: 6ம் வகுப்பு மாணவனை ஆசிட் குடிக்க வைத்து கொன்றவர்கள் யார் என்பது குறித்த அடையாளம் இன்னும் தெரியவில்லை.. எனினும் இது தொடர்பான சில தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவன் அந்த சிறுவன்.. 11 வயதுதான் ஆகிறது.. அதங்கோடு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 24ம்தேதி, இந்த பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்து, லீவும் விடப்பட்டுள்ளது.. தேர்வின் கடைசி நாள் அது.. மாணவனும் பள்ளி முடிந்ததும், அங்குள்ள பாத்ரூமுக்கு சென்றுள்ளான்.

பாத்ரூம்
அப்போது அதே பள்ளியை சேர்ந்த இன்னொரு மாணவனும் பாத்ரூம் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தான்.. கையில் கூல்ட்ரிங்ஸ் வைத்திருந்தவன், திடீரென இந்த 6ம் வகுப்பு சிறுவனுக்கு கட்டாயப்படுத்தி தந்துள்ளான்.. சிறுவனும் கூல்டிரிங்ஸை குடித்துவிட்டு, வீட்டுக்கும் வந்த பிறகுதான், காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி என அடுத்த பாதிப்புகள் ஏற்பட்டன.. ஜீரண கோளாறு, மூச்சு திணறல் போன்றவைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.. வயிற்று பகுதி ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டபோதுதான், வாயில் இருந்து குடல் வரை வெந்து போய் இருந்ததை பார்த்து டாக்டர்களே அதிர்ந்துபோனார்கள்..

கூல்டிரிங்க்ஸ்
இறுதியில் சிறுவனின் சிறுநீரகமும் செயல் இழந்து கடைசியில், 28 நாட்கள் கழித்து இறந்தேவிட்டான்.. சிறுவனை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் குளிர்பானத்தில் ஏதாவது கலந்து கொடுத்தார்களா? அல்லது வேறு ஏதாவது பிரச்னையா? யூனிபார்ம் அணிந்த அந்த மாணவன் யார்? வலுக்கட்டாயமாக கூல்டிரிங்ஸ் தர என்ன காரணம்? என்றெல்லாம் புரியாத மர்மமாகவே நீடித்து வந்த நிலையில் போலீசார் விசாரணையை துவக்கினர்.. மற்றொருபுறம் இந்த விவகாரத்தை, குமரி மாவட்ட காங்கிரஸ் கையில் எடுத்தது.. மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் படந்தாலுமூடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாயில் துணி
வாயில் துணி கட்டி தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுட்டவர்களுடன், உயிரிழந்த சிறுவனின் தந்தை சுனில் கலந்து கொண்டார்.. தன் மகனுக்கு நீதி கிடைக்கும் வரையில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாகவும், அதுவரை உடலை வாங்க போவதில்லை என்றும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.. இப்போது சிறுவனின் சடலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நிறைய மர்மங்கள் இந்த சம்பவ பின்னணியில் நிலவிவருவதாக சொல்கிறார்கள்..

விஸ்வரூபம்
இந்த பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராவை எலி கடித்து விட்டதாம்.. அதனால், கேமரா செயல்படவில்லை என்று பள்ளி நிர்வாகம் சொல்கிறது.. அதுமட்டுமல்ல தங்கள் மாணவனுக்கு, யூனிபார்மில் வந்து, கூல்டிரிங்ஸ் தந்தவன் தங்கள் பள்ளியை சேர்ந்தவன் இல்லை என்றும் திட்டவட்டமாக சொல்கிறது.. அப்படியானால் அந்த கூல்டிரிங்க்ஸ் கொடுத்தது யார்? என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்துள்ளது.. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. இந்த நிமிடம்வரை குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை.. பள்ளிக்கே சென்று, மற்ற மாணவர்களிடம் விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்..

ஜாக்ரதை
இதில் இன்னொரு விஷயமும் லீக் ஆகி கொண்டிருக்கிறது.. இந்த பள்ளி நிர்வாக குழுவில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் புள்ளிகள் இருக்கிறார்களாம்.. அந்த தைரியத்தில் தான் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறது என்று காங்கிரஸ்காரர்கள் கொந்தளிக்கிறார்கள்.. அதாவது, இந்த பள்ளியின் டிரஸ்ட் குழுவில் குமரி மாவட்ட முக்கிய தலைவரும், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பிரதானமாக இருப்பதாக சொல்கிறார்கள்.. மிகவும் ஜாக்கிரதையாக இந்த விஷயத்தை போலீசார் கையில் எடுத்தாலும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications