இந்த காலத்திலும் இப்படி... KGF படம் போல் கரூரில் கொத்தடிமையாக வைக்கப்பட்டு இருந்த 41 பேர் மீட்பு
கரூர்: தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 7 குடும்பங்களை சார்ந்த பெண்கள் மற்றும் கைக்குழந்தைகள் உட்பட 41 பேரை மீட்டு மாவட்ட அதிகாரிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
Recommended Video
கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த எல்லைமேடு பகுதியில் கே.பி.கே பிரிக்ஸ் என்ற பெயரில் தனியார் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது.
இதில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 41 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருவதாகவும் வருவாய் கோட்டாட்சியருக்கு தேசிய ஆதிவாசிகள் ஆணையத்திலிருந்து புகார் கடிதம் வந்துள்ளது.

செங்கல் சூளையில் கொடுமை
கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் விடுமுறை வழங்கப்படுவதில்லை என்றும் அவர்களை மீட்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் தலைமையில் வருவாய் துறை, தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் துரித நடவடிக்கையில் இறங்கினர்.

குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் மீட்பு
அவர்கள் இன்று காலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த தனியார் செங்கல் சூளைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்ததை போன்றே அங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம், விடுமுறை அளிக்கப்படாமல் இருப்பதும், போதிய குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்காமல் இருப்பதும் தெரியவந்தது.

மலர்ந்தது விடுதலை
இதனை அடுத்து அங்கு கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு இருந்த ஆண்கள், பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளை அதிகாரிகள் குழுவினர் மீட்டனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு தேவையான உணவுகளையும், தண்ணீரும் வழங்கப்பட்டன.

சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
அத்துடன் அவர்களுக்கு தொழிலாளர் நல அலுவலகம் சார்பில் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தலா ரூ.30 ஆயிரம் வழங்கி, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதனை தொடர்ந்து 7 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 41 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications