எனக்கு ஓட்டு போட்டா கொசுக்களை ஒழிப்பேன்.. எலிகளை பிடிப்பேன்.. அட்ராசிட்டி பண்ணும் சுயேட்சை வேட்பாளர்
கரூர்: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வாக்காளர்களை கவர்வதற்காக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஒருபுறம் வாக்குறுதிகளை அள்ளி வீசி வரும் நிலையில், கரூரில் ஒரு சுயேட்சை வேட்பாளர் ஒருவர் எனக்கு ஓட்டு போட்டால் வார்டில் கொசுக்களை ஒழிப்பேன், எலிகளை பிடிப்பேன் என எலியுடன் நடந்து சென்று வாக்காளர்களிடம் பேசி தனிக் கவனம் பெற்று வருகிறார்.
Recommended Video
தமிழகத்தில் காலியாக உள்ள நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் பின்பு மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. கரூரில் திமுக சார்பில் 41 வேட்பாளர்களும், அதிமுக சார்பில் 46 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

கரூர் தேர்தல் களம்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று அதிமுக, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் வீடு வீடாக பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பை தொடங்கினர். ஒரு சிலர் காலில் விழுந்தும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் கரூர் மாநகராட்சித் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை முதல் வார்டு வாரியாக நடைபெற்று வரும் நிலையில், 26 வது வார்டு பகுதிக்கு சுயேச்சையாக போட்டியிடும் சு.ராஜேஸ்கண்ணன் என்பவர் கடந்த திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சுயேட்சை வேட்பாளர்
கரூர் மாநகராட்சித் தேர்தலில், முதன்முதலில் வேட்புமனுத்தாக்கல் செய்தவரும் இவர்தான் முதன்முதலில் பிரச்சாரம் செய்து வருபவரும் இவர்தான். இவர் போட்டியிடும் 26 பொது வார்டுக்கு உட்பட்ட, காமராஜபுரம், காமராஜபுரம் மேற்கு, kvb நகர், கணேசா நகர், விஜய் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று எலி பெட்டியில், எலி ஒன்றினை பிடித்து அதை வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றார். திட்டம் 1ல், ஒழிப்பு திட்டமாக, ஒரு கோடி கொசுக்கள், ஒரு லட்சம் கரப்பான் பூச்சிகள், பத்தாயிரம் எலிகள், 100 தெரு நாய்கள் இவைகளை ஒழித்து, சுகாதாரமான நிலை ஏற்படுத்துவேன் என்று துண்டு பிரசுரமும் மக்களிடையே கொடுத்து வருகின்றார்.

தனிக் கவனம்
கட்சி பேதமில்லாமல் உங்கள் வீட்டுப் பிள்ளை என்று வாசகங்கள் பொருந்திய துண்டுப் பிரசுரம் மனதைக் கவர்கின்றன. மேலும் அவருடைய மகன்களுடன் காலையிலேயே வாக்கு சேகரிப்பில் தீவிரமாக களமிறங்கி வரும் சுயேட்சை வேட்பாளர் ராஜேஸ்கண்ணன் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளை எதிர்த்து கரூர் தொகுதியில் குப்பைத்தொட்டி சின்னத்தில் போட்டியிட்டவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வாக்குறுதிகள்
கரூர் மாநகராட்சியில் கொசுக்கள், எலி மற்றும் கரப்பான் பூச்சிகள் ஆகியவை அதிகரித்துள்ளது. அப்போதைய நகராட்சி தற்போதைய மாநகராட்சி நிர்வாகமும் அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சொல்லாமல் சொல்லி வருகின்றார் சுயேச்சை வேட்பாளர் ராஜேஸ் கண்ணன். மேலும் தனக்கு வாக்களித்தால் தேர்தலில் ஓட்டு கேட்பதைப் போலவே , வெற்றி பெற்ற பிறகு இதேபோல் வீடு வீடாக சென்று குறைகளை கேட்டறிந்து அதனை சரி செய்வேன் எனவும், மக்களை தன்னை தேடி வரத் தேவையில்லை, தானே தேடி வருவேன் எனவும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications