நாட்டின் அடுத்த பிரதமர்... ஸ்டாலினை கிங் மேக்கராக உருவாக்க வேண்டும் - செந்தில் பாலாஜி
லோக்சபா தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் இந்தியாவில் அடுத்த பிரதமரை உருவாக்க கூடிய சக்தியாக ஸ்டாலினை உருவாக்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கரூர்: லோக்சபா தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இந்தியாவில் அடுத்த பிரதமரை உருவாக்க கூடிய சக்தியாக ஸ்டாலினை உருவாக்க வேண்டும் எனவும் தொண்டர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட திமுகவினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி திமுக தொண்டர்களிடம் பேசினார்.

அப்போது அவர், மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம். வாக்காளர்களின் ஒவ்வொரு கோரிக்கையும் முக்கியம் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். குறிப்பாக புதிய உறுப்பினராக சேர்க்கப்படுவார்கள் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கக்கூடாது. முழு விருப்பத்தோடு அவர்களை உறுப்பினராக சேர்த்தால் தான் அது திமுகவிற்கு வாக்காக மாறும் என்று கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு லோக்சபா தேர்தல் வர உள்ளது. பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியாவில் அடுத்த பிரதமரை உருவாக்க கூடிய சக்தியாக ஸ்டாலினை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சக்தி வாய்ந்த முதல்வரான மு.க.ஸ்டாலின் என்று சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கூறி அரங்கத்தையே அதிரவைத்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை கிங் மேக்கராக உருவாக்க வேண்டும் என்று திமுக தொண்டர்களிடம் பேசியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி .
-
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications