கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொட்டுப்பாரு! காளையர்களை பந்தாடிய காளைகள்.. கரூர் ஆர்டி மலை ஜல்லிக்கட்டில் விறுவிறுப்பு! பரபரப்பு

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்டி மலையில் பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெறும். அதன்படி இன்று ஆர்டிமலையில் 800 காளைகளும், 400 வீரர்களும் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகள், காளையர்களை தூக்கி வீசியதோடு, வீரத்துக்கு பெயர் பெற்ற வீரர்கள் சீறிய காளைகளையும் தூரத்தி அடக்கியதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றவையாகும்.

நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தது. இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கனுமாம்.. பீட்டா வாய்ஸில் சவுண்டு விடும் கவிஞர் தாமரை! ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கனுமாம்.. பீட்டா வாய்ஸில் சவுண்டு விடும் கவிஞர் தாமரை!

கரூரில் ஜல்லிக்கட்டு

கரூரில் ஜல்லிக்கட்டு

இதேபோல் கடந்த 2 நாட்களாக மாநிலத்தின் பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இன்றும் சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற உள்ளது. அந்த வகையில் தான் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்டி மலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

சீறிப்பாய்ந்த காளைகள்

சீறிப்பாய்ந்த காளைகள்

வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம், தடுப்பு வேலிகள், விஐபி கேலரி, பரிசு வழங்கும் இடம், அவசர வழி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயாராக உள்ளன. மேலும் அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கின. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் சீறிப்பாய்ந்தன.

பந்தாடப்பட்ட வீரர்கள்

பந்தாடப்பட்ட வீரர்கள்

குறிப்பாக கரூர், மதுரை, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி உள்பட மாவட்டங்களில் இருந்து அதிக காளைகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 800 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ள நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். பார்வையாளர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கினர். காளைகளும் வீரர்களை தூக்கி பந்தாடியது.

பரிசுகள் வழங்கல்

பரிசுகள் வழங்கல்

வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகள், காளையர்களை தூக்கி வீசியது. இப்படி பல காளைகள் வெற்றி பெற்று உரிமையார்களுக்கு பரிசுகளை பெற்று கொடுத்தன. அதேநேரத்தில் வீரத்துக்கு பெயர் பெற்ற வீரர்கள் சீறிய காளைகளையும் தூரத்தி அடக்கி பரிசுகளை பெற்றனர். தங்க மோதிரம், தங்க நாணயம், சில்வர் பாத்திரம், சைக்கிள் உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A Jallikattu competition is held annually on the occasion of Pongal at Ardi Hill near Tokaimalai in Karur district. Accordingly, Jallikattu competition will be held in Ardimalai today. 800 bulls and 400 players are expected to participate as Power Minister Senthil Balaji will inaugurate the event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X