உடலை அடக்கம் செய்ய உயிரைப் பணயம் வைக்கும் மக்கள்.. கரூரில் அவலம்
கரூர்: கரூர் அருகே வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு செல்ல வழியில்லாததால் கழுத்தளவு தண்ணீரில் உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக்கடக்கும் அவலம் நிகழ்ந்துள்ளது
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிக அதிகமான கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் என பலதரப்பு மக்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சில கிராமங்கள் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பிற பகுதி மக்களுடன் தொடர்பின்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் அருகே உயிரிழந்தவரின் உடலை அடக்கம் உயிரைப் பணயம் வைத்து பொதுமக்கள் கழுத்தளவு நீரில் ஆற்றைக் கடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
கரூர் அருகே கரையாம்பட்டி வடக்கு தெருவில் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய கல்லடை குளத்திலிருந்து உபரிநீர் செல்லக்கூடிய வடிகால் வழியாக ஒரு கிலோமீட்டர் தொலைவில் சென்று தான் இறந்தவர்களை அடக்கம் செய்யும் நிலை உள்ளது.
தற்போது பெய்து வரும் தொடர்மழையால் கல்லடை குளம் நீர் நிரம்பி வழிந்தோடி செல்கிறது. இந்நிலையில் கரையாம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த தம்பிரான் என்பவரின் மனைவி அரியநாச்சி, வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில் இறந்தவரின் உடலை சுடுகாடு பகுதிக்கு எடுத்துச்செல்ல உரியபாதை இல்லாமல் ஒரு கிலோமீட்டர் வரை உபரிநீர் செல்லும் வாய்க்காலில் ஆபத்தான முறையில் உடலை துக்கிகொண்டு பொதுமக்கள் ஆபத்தான நிலையில் செல்கின்றனர். ஒருவேளை ஓடையில் நீர்வரத்து அதிகாரித்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், சுடுகாடு செல்ல உரியபாதை மற்றும் பாலம் அமைத்துத் தரும்படி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications