இனி எந்த கேள்வியும் கேட்காதீங்க.. பாஜகவுடன் கூட்டணி இல்லவே இல்லை.. அடித்துச் சொன்ன எடப்பாடி பழனிசாமி
கிருஷ்ணகிரி: இனி இந்தக் கேள்விக்கே இடமில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக, இறுதியாகச் சொல்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கீடு ஆலோசனைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை.

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு: கடந்த 5 வருடங்களாக பாஜக - அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாத நிலையே ஏற்பட்டது. இதனையடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் இரண்டு கட்சி ஒன்றினைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டது. ஆனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக அதிரடியாக வெளியேறியது.
இந்தநிலையில் மீண்டும் அதிமுகவை தங்கள் அணிக்குள் கொண்டு வர பாஜக தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் எதற்கும் எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவில்லை. அமித் ஷாவே, அதிமுகவுக்காக பாஜகவின் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன எனக் கூறியும், எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் மீண்டும் சேர விரும்பவில்லை. அதிமுக தலைவர்கள் அண்ணாமலையையும், பாஜகவையும் தாக்கிப் பேசி வருகின்றனர்.
எனினும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தற்போதும் பாஜக - அதிமுக மறைமுகமாக கூட்டு வைத்துள்ளதாக விமர்சித்து வருகின்றனர். தேர்தலுக்காக பாஜகவும் அதிமுகவும் நாடகம் நடத்துவதாகவும், லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் இரு கட்சிகளும் சேர்ந்து கொள்ளும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.
எடப்பாடி பரபர பேச்சு: இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "பாஜகவுடன் அதிமுக மறைமுக கூட்டணியில் இருப்பதாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டோம். முன்பே அறிவித்துவிட்டோம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை.
அதற்குப் பிறகு கடந்த 5 மாதங்களாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவறான அவதூறான தகவல்களைப் பேசி வருகிறார்கள். இன்று மீண்டும் ஒருமுறை உறுதியாகச் சொல்கிறேன், உறுதியாகச் சொல்கிறேன். அதிமுக, பாஜக கூட்டணியில் இல்லை, இல்லை. இல்லவே இல்லை. இனிமேல் ஊடக நண்பர்கள் இது தொடர்பான எந்தக் கேள்வியும் எழுப்ப வேண்டாம்.
எந்த ரகசிய பேச்சுவார்த்தையும் கிடையாது. லோக்சபா தேர்தலுக்கு எந்த நேரத்தில் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டுமோ, அந்த நேரத்தில் சரியான கூட்டணி அமையும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications