Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கழிப்பறை இல்லாத மக்கள்.. சூளகிரி பஸ் நிலைய டாய்லெட்தான் ஒரே வழி.. அதற்கும் கட்டணம்! கவனிக்குமா அரசு?

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கழிப்பறை வசதியும் இல்லாததால், பொதுக் கழிப்பறையை பயன்படுத்தும் மக்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் வந்திருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது சூளகிரி. இங்கு உள்ள காமராஜர் நகரில் இருக்கும் குடும்பங்கள் தங்களுக்கு கழிப்பறை கட்டித்தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் இருக்கும் பொது கழிப்பறையை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம், அங்கும் கழிப்பறையை பயன்படுத்த பணம் வசூலிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

பட்டியல் இன மக்கள்

பட்டியல் இன மக்கள்

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது காமராஜர் நகர். நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கும் இந்தப்பகுதியில் நூறு குடும்பங்களுக்கும் அதிகமான‌ பட்டியல் இன மக்கள் இங்கு வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கழிப்பறை வசதி கிடையாது. ஆண்கள் பெண்கள் என அனைவரும், சூளகிரி பேருந்து நிலையத்தில் இருக்கும் பொதுக்கழிப்பறையை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், தற்போது அந்தக் கழிப்பறையைப் பயன்படுத்த ஒரு நபருக்கு ஐந்து ரூபாய் வசூலிப்பதாக கூறுகிறார்கள். தினக்கூலியான இவர்கள் ஒவ்வொரு முறை கழிப்பறையை பயன்படுத்தவும் கட்டாயமாக ஐந்து ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியதால், அவர்கள் கழிப்பறை பயன்படுத்துவதை குறைத்து வருகிறார்கள்.

 5 ரூபாய்

5 ரூபாய்

காமராஜ் நகரில் வசித்துவரும் சுரேஷ் இதுகுறித்து கூறுகையில், " எங்கள் குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறோம். ஒரு நாளைக்கு கழிப்பறைக்கு மட்டுமே நாங்கள் 25 ரூபாய் செலவு செய்கிறோம். எங்களால் தினமும் அவ்வளவு தொகையை கொடுத்து கழிப்பறை செல்ல முடியவில்லை. எங்களுக்கு கழிப்பறை கட்டித்தர சொல்லி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. எங்களுக்கு கழிப்பறை கட்ட அதிகாரிகள் முயற்சி செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.

பெண்களுக்கு கழிப்பறை

பெண்களுக்கு கழிப்பறை

அதே பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் கூறுகையில், ''காய்கறி சந்தை, பேருந்து நிலையத்தில் இருக்கும் கழிப்பறையும், குளியலறையும் தான் நாங்கள் பயன்படுத்துகிறோம். அந்த கழிப்பறையும் கால்வாய் அமைப்பதற்காக விரைவில் இடிக்கப்பட இருக்கிறது. ஐந்து ரூபாய் கொடுத்து இனியும் கழிப்பறை பயன்படுத்த முடியாது. எங்கள் பெண்களுக்கு கழிப்பறை மிக முக்கியம்.'' என்று தெரிவித்திருக்கிறார்.

இலவசம்

இலவசம்

பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு ஒப்பந்தக்காரர்கள் இல்லாததால், தனியார்கள், பொதுமக்களிடம் பணம் வசூல் செய்கின்றனர். ஆனால், பொது கழிப்பறையை பராமரிக்க வேண்டியிருப்பதால், பணம் வசூலிக்கப்பட்டதாக அங்கு துப்புரவு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.சுப்ரமணி கூறுகையில், ''பொதுக்கழிப்பறையை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக மாற்றிவிட்டோம், இனி யாரும் பணம் வசூலிக்கமாட்டார்கள்'' என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+