"லவ் பண்ணு.. குழந்தை கொடுப்பேன்.." மாணவியிடம் அத்துமீறிய இந்திய மாணவர்! வெளியே தள்ளிய ஆக்ஸ்போர்ட்
லண்டன்: இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த இந்திய வம்சவாளி மாணவர் ஒருவர், சக மாணவிக்கு 100 பக்கத்தில் மிரட்டல் கடிதம் அனுப்பியதோடு, வாய்ஸ் மெசேஜ்ஜும் அனுப்பி தொல்லை செய்ததால் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்திய வம்சாவளி மாணவரான ஷகில் பவ்னானி என்ற ஆக்ஸ்போர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார். அதே பல்கலைக் கழகத்தில் நர்சிங் படித்து வந்த மாணவி ஒருவருக்கு, ஷகில் 100 பக்கத்தில் தன்னை தொடர்பில் இருக்குமாரும் மிரட்டல் கடிதம் அனுப்பியதாக புகார் எழுந்தது.
அந்த மாணவியை தன் மனைவியாக்கப் போவதாகவும், தன்னுடைய குழந்தைகளை உன் மூலம் பிறக்க வைக்கப்போகிறேன் என வாய்ஸ் மெசேஜ்களையும் ஷகில் அந்த மாணவிக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. உன்னுடன் பேச எனக்கு விருப்பமில்லை என கூறியும் ஷகில் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் , எங்கே தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவாரோ என பயந்த அந்த மாணவி இதுகுறித்து பல்கலைக் கழகத்திலும் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

100 பக்க மிரட்டல் கடிதம்
இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. முதலில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தான் அந்த மாணவியை பின் தொடர்ந்து உண்மைதான் என்றும், ஆனால் மிரட்டவில்லை ஆன்லைனில் தேடிய போது கிடைத்த கவிதைகளை தொகுத்து 100 பக்க கடிதமாக வழங்கியதாக கூறினார். இது மிகத் தீவிரமான குற்றமில்லை என நீதிபதி கருதியதையடுத்து ஷகில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் நீதிமன்ற விதிமுறைகளை மீறி அம்மாணவியை மீண்டும் தொந்தரவு செய்ததால் மீண்டும் ஷகில் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

4 மாத சிறை
வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் மாணவர் ஷகில் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக் கழக விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட பவ்னியையை பல்கலைக் கழகத்திலிருந்தும், அவர் படித்த பட்டத்திலிருந்தும் வெளியேறுவதாக , அவர்கள் ஹாங்காங் செல்லவுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றம்
துன்புறுத்தல், வன்முறை அல்லது துஷ்பிரயோகம் ஆகியவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக மாணவர்களுக்கு உறுதியளிக்க விரும்புவதாகவும், இந்த வழக்கிலிருந்து பாடங்கள் கற்றுக் கொள்ளப்படும், இந்த தனிப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக நடத்தை விசாரணையைத் தொடர்ந்து, மாணவர் ஆக்ஸ்போர்டு புரூக்ஸில் இருந்து வெளியேற்றப்படுவதாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவருக்கு கண்டனம்
பல்கலைக் கழகத்திலிருந்து ஷகில் பவ்னானி வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் , பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பலரும் தங்களை கருத்துக்களை கூறி வருகின்றனர். அவர் ஹாங்காங் சென்று தனது பொறியியல் படிப்பை தொடருவதாக கூறியுள்ள நிலையில், அவருக்கு எதிரான கண்டனங்களும் வலுத்து வருகிறது
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications