மார்பு + கழுத்து + வயிறு.. ஐயோ நெஞ்சே நடுங்குதே.. யாரிந்த பெண்கள்? பட்டபகலில் இப்படியா.. போலீஸ் ஷாக்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.. இதை பார்ப்போர் எல்லாம் கதிகலங்கி வருகிறார்கள்.. மனிதநேய அடிப்படையில் உடனடி நடவடிக்கை வேண்டும் என்றும் கோருகிறார்கள்.

இங்கிலாந்து லெய்செஸ்டர் ஷையர் பகுதியில், ஆஸ்பியின் ஸ்டேஷன் ரோட்டில் ஒரு பூங்கா இருக்கிறது.. இந்த பூங்காவில் 2 இளம்பெண்கள் சேர்ந்து மற்றொரு பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்து தாக்குகிறார்கள்.

Are these two women attacking and kicking the teen young girl in park

பூங்கா: இதுதான் வீடியோவாக வெளிவந்துள்ளது.. அந்த வீடியோவில், 2 இளம்பெண்களும், இன்னொரு பெண்ணும் இருக்கிறார்கள்.. அந்த பெண் சிறுமி போல தெரிகிறார்... 2 இளம்பெண்களும், அவர்களுடைய கால்களால் அந்த சிறுமியின் மார்பு, தலை, வயிறு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்குகின்றனர்... பிறகு, கைகளாலும் குத்துகிறார்கள்.. இதனால், அந்த சிறுமி நிலைகுலைந்து வலியால் துடிக்கிறார்.

பெண்கள்: பிறகு, எழுந்து உட்கார்ந்து எதையோ சொல்கிறார்.. அதை கேட்டபிறகும், அந்த பெண்கள் மறுபடியும் சிறுமியை கொடூரமாக தாக்குகின்றனர்..

அடிவாங்கிய பெண், எதுவுமே சொல்லாமல் செல்கிறார். அவர் எழுந்து நிற்கும்போதும் அவரை தாக்குகிறார்கள். அவர் கையில் வைத்திருந்த, பையையும் சேர்த்து 2 பேரும் உதைக்கிறார்கள்.. இத்தனைக்கும் இந்த சம்பவம் பகலில் நடந்துள்ளது.. அந்த பூங்காவில் நிறைய பேர் இருக்கிறார்கள்.. ஒருத்தருமே இதை தடுக்கவில்லை. இந்த பெண்கள் யார் என்று தெரியவில்லை.. எதற்காக சிறுமியை தாக்கினார்கள் என்றும் தெரியவில்லை.

வீடியோ: ஆனால், இந்த வீடியோவை, அந்த சிறுமியின் அண்ணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். என் தங்கைக்கு நேர்ந்த கதியை பாருங்க என்று வலியுடன் கூறியுள்ளார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானதையடுத்து போலீசாரின் பார்வைக்கும் சென்றது.. உடனடியாக விசாரணையிலும் இறங்கினர்.. இதுகுறித்து அவர்கள் சொல்லும்போது, "சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இந்த சம்பவம் இப்போது நடந்தது கிடையாது, இது ஒரு பழைய வீடியோ என்று ஒருவர் சொல்கிறார்.. ஆனால், மேலும் பலரோ, இது கடந்த 24ம் தேதி இங்கிலாந்து பூங்காவில் நடைபெற்றுள்ளது என்று பதிவிட்டு வருகிறார்கள்..

ட்வீட்கள்: சிறுமியை தாக்கிய பெண்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மோசமான செயலில் ஈடுப்பட்ட இரண்டு பெண்களுக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன... அத்துடன், தாக்குதலுக்குள்ளான சிறுமி விரைவில் குணம் அடைய வேண்டும் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+