லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சுத்த மோசம்".. ஆசை ஆசையாய் வெயிட் பண்ண "கஸ்டமர்".. மெசேஜ் தந்த டெலிவரி பாய்.. இப்படி கூட நடக்குமா?

உணவு ஆர்டர் செய்தவருக்கு வித்தியாசமான முறையில் மன்னிப்பு கேட்ட நபரை தேடிவருகிறார்கள்

Google Oneindia Tamil News

லண்டன்: ஆசை ஆசையாய் உணவு சாப்பிடலாம் என்று ஆர்டர் செய்து காத்திருந்தவருக்கு, திடீரென அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது.. என்னவாம்?

பல முன்னணி நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் காலம் நேரம் பாராமல் வேலை பார்ப்பவர்கள்.. கடும் வெயில், மழையை பாராமல் உழைப்பவர்கள்.. இதைவிட பெரிய சிக்கல் டிராஃபிக் ஜாம்.

இந்த டிராபிக்கில் இவர்கள் சிக்கி படாதபாடுபட்டுதான், ஆர்டர் செய்யப்பட்ட உணவை கொண்டு போய் உரியவர்களிடம் சேர்க்கிறார்கள்..

கோடீஸ்வரர்!.. ஆனாலும் 3 மாதத்திற்கு ஒருமுறை டெலிவரி செய்யும் சொமேட்டோ 'சிஇஓ'.. எதற்காக தெரியுமா? கோடீஸ்வரர்!.. ஆனாலும் 3 மாதத்திற்கு ஒருமுறை டெலிவரி செய்யும் சொமேட்டோ 'சிஇஓ'.. எதற்காக தெரியுமா?

 செருப்படி

செருப்படி

ஆனால் வீட்டில் இருந்து கொண்டு ஆர்டரை பெறும் வாடிக்கையாளர்கள் சிலர், இதையே பிரச்சனையாக்கி விடுவதும் உண்டு.. ஏதாவது ஒரு காரணங்களுக்காக அவர்களை திட்டுவதும், காயப்படுத்துவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.. சில நாட்களுக்கு முன்பு, பிரபல சோமேட்டா ஊழியர் ஒருவரை பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து, செருப்பால் அடிக்கும் வீடியோவும் இணையத்தில் பரவியது.. இதை பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள், அந்த ஊழியருக்குதான் தங்கள் ஆதரவை வழங்கினர்.

 கட்டிப்பிடித்து முத்தம்

கட்டிப்பிடித்து முத்தம்

அதேபோல கடந்த மாதம் மராட்டிய மாநிலம் புனேவின் யெவலேவாடி பகுதியில் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த பெண்ணுக்கு 19 வயதிருக்கும்.. சோமாட்டோ மூலம் சாப்பாடு ஆர்டர் தந்துள்ளார்.. இரவு 9.30 மணியளவில், சோமாட்டோ டெலிவரி ஊழியர் ரயீஸ் ஷேக் என்பவர் உணவு டெலிவரி செய்ய சென்றிருக்கிறார்.. ஷேக்கிற்கு 40 வயதாகிறது.. அந்த இளம்பெண்ணுக்கு உணவை டெலிவரி செய்துள்ளார்.. அந்த பெண்ணும், தேங்க்ஸ் என்று சொல்லி உணவை பெற்றுக் கொண்டுள்ளார்.. உடனே ஷேக்கும், தேங்க்ஸ் என சொல்லிவிட்டு, டக்கென அந்த பெண்ணின் கன்னத்தில் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து 2 முறை முத்தம் தந்துவிட்டார்..

 திகில் மெசேஜ்

திகில் மெசேஜ்

அதுமட்டுமல்ல, உனக்கு என்ன வேணுமோ என்கிட்ட தயங்காமல் கேளு, நான் உனக்கு மாமா மாதிரி என்று வேறு டயலாக் பேசியுள்ளார்.. அந்த பெண் கத்தி கூச்சலிடவும் ஷேக் ஒரே ஓட்டமாக தப்பி ஓடிவிட்டார். அதற்கு பிறகு அந்த சம்பவம் குறித்து என்ன நடந்தது என்று தெரியவில்லை.. இப்படி டெலிவரி செய்பவர்கள் தினுசு தினுசான செயல்களில் ஈடுபட்டு கஸ்டமர்களை மிரள வைத்துவிடுகிறார்கள்.. இதோ இப்போதும் ஒரு வித்தியாசமான சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.. டெலிவரோ நிறுவனத்தில் ஒருத்தர் உணவு ஆர்டர் செய்துள்ளார்.. ஆனால் அவருக்கு ஆர்டர் செய்யப்பட்ட உணவு போய் சேரவில்லை.. மாறாக மெசேஜ் வந்தது.. அந்த மெசேஜ்ஜை அனுப்பியது வேறு யாருமல்ல.. டெலிவரி செய்யும் முகவர்தான்.

 டெலிவரி பாய்

டெலிவரி பாய்

டெலிவரோ (Deliveroo) என்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் நிரந்தர கஸ்டமர் லியம் பாக்னல்... உணவு ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தவருக்கு ஒரு மன்னிப்பு மெசேஜ்தான் வந்தது.. "எதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்கறீங்க" என்று லியம் பாக்னல் கேட்டுள்ளார்.. அதற்கு அந்த டெலிவரிபாய், "நீங்கள் ஆர்டர் செய்திருந்த சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது.. அதனால், என்னை கன்ட்ரோல் செய்ய முடியாமல், மொத்த சாப்பாட்டையும் நானே சாப்பிட்டு கொள்கிறேன்.. நீங்கள் வேண்டுமானால் என்னுடைய டெலிவரோ நிறுவனத்திடம் என்னை பற்றி புகார் அளித்துக்கொள்ளுங்கள்" என்று மெசேஜ் அனுப்பினார்.

 சுத்த மோசம்

சுத்த மோசம்

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த லியம், "நீ ரொம்ப மோசம்.. ஆனாலும் இதற்கெல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன்" என்று கூலாக பதில் சொல்லி உள்ளார்.. இவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட அந்த மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்களை ட்விட்டரிலும் லியம் பாக்னல் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.. இந்த ட்வீட் வைரலாகி 'டெலிவரோ' நிறுவனத்தின் பார்வைக்கு சென்றுவிட்டது.. பிறகு உடனடியாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது... அதுமட்டுமல்ல, லியம் பாக்னல் தங்களது ரெகுலர் கஸ்டமர் என்பதால், உடனடியாக அவருக்கு, அவர் கேட்டிருந்த அதே சாப்பாடு டெலிவரி செய்தது.. ஆனால், ஆர்டர் செய்த சாப்பாட்டை திருடி சாப்பிட்டாரே, அந்த டெலிவரி பாயை இப்போது காணோமாம்.. தேடி கொண்டிருக்கிறார்கள்..!!

English summary
Big Mistake: Food delivery guy ate the customer food and texted for apology
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X