லண்டன் காந்தி சிலையில் இருந்த அழுக்கு..சுத்தம் செய்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி..குவியும் பாராட்டு
லண்டன்: காந்தி ஜெயந்தியையொட்டி பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி சூர்யா லண்டனில் உள்ள காந்தியின் சிலைக்கு மரியாதை செய்தார். அப்போது சிலையின் மீது இருந்த அழுக்கை அவர் தனது கைக்குட்டையால் சுத்தம் செய்தார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் தேசப்பிதாவான மகாத்மா காந்தியின் இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளை பெருமைப்படுத்தும் வகையில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று காந்தியின் 153ஆவது பிறந்தநாள் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியா உள்பட வெளிநாடுகளில் உள்ள காந்தியின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தலைவர்கள் மரியாதை
இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்துக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாபந்தனவாலு காதி கிராமோத்யாவில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிரிட்டனில் தேஜஸ்வி யாதவ்
இதேபோல் தமிழகம் உள்பட நாட்டின் அனைத்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் காந்தியை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் பீகார் மாநில துணை முதல்வரும், லாலு பிரசாத்தின் மகனும்-ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் பிரிட்டனில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

சிலையை சுத்தம் செய்த தேஜஸ்வி
இதனால் அவர் பிரிட்டனில் இருந்தபடியே காந்தி ஜெயந்தியை கொண்டாட முடிவு செய்தார். அதன்படி அவர் லண்டனில் உள்ள நாடாளுமன்றம் அருகே உள்ள காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது காந்தியின் சிலை மீது அழுக்கு படிந்திருந்தது. இதை பார்த்த தேஜஸ்வி தான் வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து அழுக்கை நன்கு துடைத்து சுத்தம் செய்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சிலர் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சுத்தம் செய்வது போல் நாடகமாடுகிறார் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

பீகாரில் நடந்த ஆட்சிமாற்றம்
முன்னதாக பீகாரில் எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் இருந்தார். மாநிலத்தில் பாஜக-நிதிஷ் குமாின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது. இந்த கூட்டணி சமீபத்தில் உடைந்த நிலையில் நிதிஷ் குமார்-தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கைகோர்த்து புதிய ஆட்சியை அமைத்தனர். இதையடுத்து நிதிஷ் குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications