Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மன்னராவதற்கு முன்பு.. தங்க இழை கொண்ட திரைக்கு பின்பு.. சார்லஸுக்கு தேய்க்கப்படும் புனித எண்ணெய்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டிக் கொள்ளும் முன்பு அவருக்கு புனித எண்ணெய் ஒன்று தேய்க்கப்படும். அந்த எண்ணெய் தேய்க்கும் சடங்கு பல 100 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

ராணி இரண்டாம் எலிசபெத் பிரிட்டிஷ் வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்தார். 96 வயதான ராணி தனது உடல்நல பாதிப்பால் ஸ்காட்லாந்தில் அரண்மனையில் தங்கியிருந்த போது காலமானார்.

Do you know what is called Holy Chrism oil which is to be applied for King Charles?

ராணியின் மறைவால் பிரிட்டன் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து புதிய மன்னராக அவரது மூத்த மகன் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார். இவரது முடிசூட்டு விழா இன்றைய தினம் லண்டனில் நடைபெறுகிறது.

இந்த விழாவையொட்டி மே 8ஆம் தேதி பொது விடுமுறையை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மன்னரின் தலையில் 2,2 கிலோ எடை கொண்ட கிரீடம் வைக்கப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளாக இந்த முடிசூட்டு விழா ஒரே மாதிரி நடந்து வருகிறது. மன்னராக பதவியேற்பதற்கு முன்னர் மன்னர் சார்லஸும் அவருடைய மனைவி கமீலாவும் குதிரைகள் பூட்டப்பட்ட மிகச் சிறிய தங்க ரதத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு செல்கிறார்கள்.

Do you know what is called Holy Chrism oil which is to be applied for King Charles?

இந்த ரதத்தில் ஏசி வசதி இருக்கும். 700 ஆண்டு கால பழமையான இருக்கையில் நின்று கொண்டு மன்னராக சார்லஸ் பதவியேற்கிறார் என்பதை அங்கீகரித்து பிஷப் ஒரு அறிவிப்பை வெளியிடுவார். அந்த நேரம் பார்த்து God save the King என அனைவரும் முழங்குவர். பின்னர் அரசர் அந்த இருக்கையில் அமர வைக்கப்படுவார்.

இதையடுத்து அவருடைய ஆடைகள் களையப்படும். அப்போது பார்வையாளர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக தங்க இழைகளால் ஆன திரை மூலம் மறைக்கப்படும். பின்னர் மன்னரின் தலை, உடல் பகுதியில் ஹோலி கிறிஸம் எண்ணெய் , புனித எண்ணெய் தேய்த்துவிடுவார்கள். ஜெருசலேம் நகரில் அரசருக்கென்றே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெய் ஆலிவ் மலையில் கிடைக்கும் ஆலிவ் இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

Do you know what is called Holy Chrism oil which is to be applied for King Charles?

இந்த எண்ணெய் அங்கிருந்து கடந்த மார்ச் மாதமே லண்டனுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அந்த எண்ணெயில் எள், மல்லிகை, ரோஜா, ஆம்பர், நெரோலி, பட்டை ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சாறுகள் இருக்கும். இதில் விலங்கு கொழுப்புகள் ஏதும் இருக்காது. இந்த எண்ணெய் ஜெருசலேம் நாட்டின பிஷப்புகளால் ஆசிர்வதிக்கப்படும். இந்த எண்ணெய் தேய்ப்பதற்காக ஒரு குப்பியும் ஸ்பூனும் பயன்படுத்தப்படும். இந்த ஸ்பூன் 12 ஆவது நூற்றாண்டை சேர்ந்ததாகும். இது தங்கம், முத்து உள்ளிட்டவையால் ஆனது. முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்படும் பழமையான பொருள் ஸ்பூன்தான். குப்பியானது தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும்.

Do you know what is called Holy Chrism oil which is to be applied for King Charles?

1953 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணியாக முடிசூட்டிக் கொண்ட ராணி எலிசபெத்திற்கும் இதே முறையில் எண்ணெய் தயாரித்து அனுப்பப்பட்டது. இதே முறைதான் 100 ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. இந்த எண்ணெய் குளியலுக்கு பிறகு மன்னருக்கு அரசு குடும்பத்தின் அதிகாரத்தை அளிக்கும் செங்கோல் கொடுக்கப்படும். இதையடுத்து ஆர்ச் பிஷப் மன்னரின் தலையில் புனித எட்வர்ட்டின் கிரீடத்தை சூட்டுவார். பின்னர் அரியணையை நோக்கி மன்னர் செல்வார். இதே போல் கமீலாவுக்கும் சடங்குகள் செய்யப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+