லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'இன்னும் நான்கே மாதம்... கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்படும்'.. அடித்து கூறும் பிரிட்டன்.. எப்படி?

Google Oneindia Tamil News

லண்டன்: தடுப்பூசி பணிகள் காரணமாக வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் கொரோனாவில் இல்லாத ஒரு நாடாகப் பிரிட்டன் மாறும் என அந்நாட்டின் தடுப்பூசி டாஸ்ஃபோர்ஸ் தலைவர் கிளைவ் டிக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் தற்போது கொரோனா வைரசின் 2ஆவது, 3ஆவது அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் உருமாறிய கொரோனா வகைகளும் வைரஸ் பரவலின் வேகத்தை அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்காக தளர்வு..மருத்துவமனைகளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தலாம்.. அரசு அனுமதி! கொரோனாவுக்காக தளர்வு..மருத்துவமனைகளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தலாம்.. அரசு அனுமதி!

தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசி மட்டுமே கொரோனாவில் இருந்து மக்களைக் காக்கும் ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் தடுப்பூசி பணிகளை அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரிட்டன் தடுப்பூசி பணிகள்

பிரிட்டன் தடுப்பூசி பணிகள்

குறிப்பாக மற்ற நாடுகளைக் காட்டிலும் பிரிட்டனில், கொரோனா தடுப்பூசி பணிகள் மிக தீவிரமாக நடத்தப்படுகிறது. பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு பிரிட்டன் ஆகும். இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதால், வரும் ஜூலை மாத இறுதியில் பிரிட்டன் நாட்டிலுள்ள அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டிருக்கும் என அந்நாட்டின் தடுப்பூசி டாஸ்ஃபோர்ஸ் தலைவர் கிளைவ் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா இல்லாத பிரிட்டன்

கொரோனா இல்லாத பிரிட்டன்

பிரிட்டன் நாட்டில் கொரோனா பாதிப்பு என்பது ஆகஸ்ட் மாதத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும் என்றும் அனைத்து கொரோனா வகைகளுக்கு எதிராகவும் தடுப்பூசி செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சுமார் 6.6 கோடி மக்கள்தொகையைக் கொண்ட பிரிட்டனில் தற்போது வரை 5 கோடி பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பணிகளை விரைவாக முடிப்பதன் மூலம், வரும் ஆகஸ்ட் மாதம் கொரோனா ஆபத்து இல்லாத நாடாகப் பிரிட்டன் மாறும் என கிளைவ் டிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவதாக பூஸ்டர் டோஸ்

மூன்றாவதாக பூஸ்டர் டோஸ்

40 வயதுக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியால் ரத்த உறைதல் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் இளைஞர்களுக்கு வேறு தடுப்பூசிகளை அளிப்பது குறித்தும் ஆலோசனை செய்து வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், இரண்டு டோஸ்களை தவிர்த்து, மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி டோஸ் செலுத்தும் பணிகளும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

Array

Array

பிரிட்டன் நாட்டில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. இதனால் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு இறுதியில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது வைரஸ் பரவலின் வேகத்தைப் பல மடங்கு அதிகரித்தது. இதன் பிறகு, அங்கு மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகப்படுத்தப்பட்டது.

English summary
UK Vaccine Task Force Chief about Corona vaccination in the nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X