கர்ப்பமா இருக்கீங்களா? வேலை இல்லை போங்க.. பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்! ப்பா இவ்வளவு லட்சம் இழப்பீடா!
லண்டன்: கர்ப்பம் தரித்த ஒரே காரணத்துக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் சட்டப் போராட்டம் நடத்தி ரூ.15 லட்சம் இழப்பீடு பெற்ற சம்பவம் பிரிட்டனில் நடந்துள்ளது.
இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கோலோச்சி பல சாதனைகளை புரிந்து வந்தாலும், உடனடியாக அவர்களுக்கு பணியிடங்களில் அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. என்னதான் திறமைகள் இருந்தாலும், ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட இந்த சமூகத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படுவது அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதைவிட கொடுமை, பெண்களை வேலைக்கு எடுத்தால் அவர்கள் கர்ப்பமாகி விடுவார்களோ என்ற பயத்தின் காரணமாகவே பல நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு எடுப்பதை தவிர்த்து விடுகின்றன. மேலும், பணியில் இருக்கும் பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், அவர்களை ஏதாவது காரணத்தை சொல்லி பணியில் இருந்து நீக்குவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. வளர்ந்த நாடு, வளரும் நாடு என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைத்து நாடுகளிலும் இந்தக் கொடுமை அரங்கேறிதான் வருகிறது. அந்த வகையில், வல்லரசு நாடான பிரிட்டனில் கூட இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

5 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பம்
பிரிட்டனில் உள்ள எஸ்ஸெக்ஸ் நகரில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் சார்லோட் லெய்டெக் (34) பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் இன்னும் குழந்தை இல்லை. இதற்கு முன்பு 3 முறை அவருக்கு கருக்கலைந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தனது மேனேஜரிடம் கூறியுள்ளார்.

பேறுகால விடுமுறை கிடையாது
ஆனால், சார்லோட் இவ்வாறு கூறியதுமே மேனேஜரின் முகம் மாறியிருக்கிறது. "வேலைக்கு சேர்ந்து 5 மாதங்கள்தான் ஆகிறது. எனவே உங்களுக்கு பேறுகால விடுமுறை கொடுக்க முடியாது" என அவர் கூறியிருக்கிறார். அதற்கு சார்லோட், "ஏற்கனவே 3 முறை எனக்கு கருக்கலைந்து இருக்கிறது. இந்த முறை எப்படியாவது குழந்தையை பெற்றெடுக்க விரும்புகிறேன். தயவுசெய்து கருணை காட்டுங்கள்" எனக் கூறியிருக்கிறார்.

பணிநீக்கம்
எனினும், அந்த மேனேஜரோ சிறிது கூட இரக்கமில்லாமல் சார்லோட்டை பணியில் இருந்து நீக்கினார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த சார்லோட்டுக்கு கரு கலைந்துவிட்டது. இதையடுத்து, தன்னை பணிநீக்கம் செய்த நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர் தீர்ப்பாயத்தில் சார்லோட் வழக்கு தொடர்ந்தார். சுமார் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

ரூ.15 லட்சம் இழப்பீடு
அந்த உத்தரவில், "கர்ப்பம் அடைந்த ஒரே காரணத்துக்காக சார்லோட் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. முன்பே கருக்கலைந்திருக்கிறது எனக் கூறிய பின்பும், இரக்கமே இல்லாமல் அந்த நிறுவனம் சார்லோட்டை நீக்கியிருக்கிறது. இந்த மன உளைச்சல் கூட அவருக்கு கருக்கலைந்ததற்கு காரணமாக இருக்கலாம். எனவே, அவருக்கு 14,885 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம்) இழப்பீடாக அந்த நிறுவனம் உடனே வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ரூ.15 லட்சத்தை சார்லோட்டுக்கு அந்த நிறுவனம் வழங்கியது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications