அடுத்த ரிஷி சுனக் இவரா? பகவத் கீதையுடன் பிரிட்டன் எம்பியாக பதவியேற்ற பெண்.. யார் இந்த சிவானி ராஜா?
லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த 29 வயது நிரம்பிய சிவானி ராஜா பகவத் கீதையை கையில் வைத்து எம்பியாக பதவியேற்று கொண்டார். இந்நிலையில் தான் பிரிட்டன் அடுத்த ரிஷி சுனக் இவரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் சிவானி ராஜாவின் பின்னணி பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டை போல் பிரிட்டனிலும் 5 ஆண்டுக்கு ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸை தொடர்ந்து இந்திய வம்சவாளியை சேர்ந்தவரும், இன்போசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக் பிரதமரானார்.

இந்நிலையில் தான் கடந்த 4ம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. அங்கு மொத்தம் 650 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
பிரிட்டனை பொறுத்தமட்டில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. 4ம் தேதி தேர்தல் முடிவடைந்த நிலையில் 5ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வியடைந்த நிலையில் கீர் ஸ்டார்மரின் கட்சி அமோக வெற்றி பெற்றது.
அதாவது கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 33.7 சதவீத ஓட்டுகளுடன் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி 412 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ரிஷி சுனக்கின் கட்சி 23.7 சதவீத ஓட்டுகளுடன் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து பிரிட்டன் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் கீர் ஸ்டார்மர் ஆகியுள்ளார்.
இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் உள்பட மேலும் சிலர் வெற்றி பெற்றனர். அதில் ஒருவர் தான் சிவானி ராஜா. இவர் லெய்செஸ்டர் கிழக்கு தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரிடம் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலாளர் கட்சியின் ராஜேஷ் அகர்வால் தோல்வியடைந்தார். இந்த தொகுதி கடந்த 37 ஆண்டுகளாக தொழிலாளர் கட்சியின் கோட்டையாக இருந்த நிலையில் அங்கு சிவானி ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாகி உள்ளார்.
இந்நிலையில் தான் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்பியாக பதவியேற்றார். அப்போது அவர் பகவத் கீதை மீது கைவைத்து உறுதிமொழி எடுத்து கொண்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. பிரிட்டன் பிரதமராக இருந்த ரிஷி சுனக் இதற்கு முன்பு பகவத் கீதையை வைத்து பதவியேற்றார். மேலும் அவர் அடிக்கடி தனது பேச்சுக்களில் கூட பகவத் கீதையை பற்றி பெருமையாக கூறி வந்துள்ளதோடு, எப்போதும் தன்னுடன் பகவத் கீதையை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் பிரிட்டனின் அடுத்த ரிஷி சுனக்காக சிவானி ராஜாவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் சிவானி ராஜாவும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது பெற்றோர் குஜராத்தை சேர்ந்தவர். அவர்கள் பிரிட்டனில் செட்டில் ஆன நிலையில் சிவானி ராஜாவும் அங்கேயே வளர்ந்துள்ளார். இவருக்கு தற்போது வயது 29 தான் ஆகிறது. இப்போது எம்பியாகி உள்ளதால் பிரிட்டன் அரசியலில் அவர் நல்ல நிலைக்கு வரலாம் என சொல்லப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சிவானி ராஜா, தொழிலாளர் கட்சியின் வேட்பாளரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜேஷ் அகர்வாலை தோற்கடித்துள்ளார். இவர் சாதாரண நபர் இல்லை. ஏனென்றால் ராஜேஷ் அகர்வால் லண்டன் துணை மேயராக பதவி வகித்தவர். சிவானி ராஜா 12,526 ஓட்டுகள் பெற்ற நிலையில் ராஜேஷ் அகர்வால் 10,100 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
இந்நிலையில் தான் பகவத் கீதை மீது உறுதிமொழி ஏற்றுக்கொண்ட சிவானி ராஜா அதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பெருமையாக கூறியுள்ளார். அந்த பதிவில், ‛‛இன்று லெய்செஸ்டர் கிழக்கு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் பதவியேற்றது பெருமையாக இருக்கிறது. பகவத் கீதையின் மீது மன்னர் சார்லசுக்கு எனது உறுதிமொழியை அளித்ததில் பெருமைப்படுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications