பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய்.. வீடியோவில் உடல் மெலிந்து சோர்வான தோற்றம்!
லண்டன்: பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சையை அவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதலே பொதுவெளியில் தோன்றாத கேத் மிடில்டன், தனக்கு புற்றுநோய் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன், இவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் கோலாகலமாக திருமணம் நடந்தது.
இந்த நிலையில் அரண்மனையில் வசித்து வரும் இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவரது அரச பணிகளை இளவரசர் வில்லியம்ஸ் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் இளவரசி கேத் மிடில்டனை காணவில்லை என இங்கிலாந்தில் புதிய பரபரப்பு கிளம்பியது. அதாவது ஜனவரி மாதம் முதல் கேத் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அரண்மனை செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த செய்திக் குறிப்பில் "இளவரசி கேத்துக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அவர் ஈஸ்டர் பண்டிகை வரை அதாவது மார்ச் 31 ஆம் தேதி வரை அரச கடமைகளை செய்ய மாட்டார். அவருக்கு ஓய்வு தேவை" என அந்த குறிப்பில் இருந்தது,
எனினும் பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கேத், பொதுமக்களுடன் நெருக்கம் காட்டி வந்தார். ஆனால் அண்மையில் அதிகளவில் பொது நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்ளவே இல்லை. இதனால் அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதாக ஸ்பானிஷ் செய்தியாளர் ஒருவர் கிளப்பிவிட்டுவிட்டார்.
கேத் கோமாவுக்கு சென்றுவிட்டார். இதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன என்றெல்லாம் அந்த செய்தியாளர் பரபரப்பை கிளப்பினார். இதை அரண்மனை வட்டாரங்கள் மறுத்தன. கேத் மிடில்டன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் பிரியப்படுவார். மூன்று குழந்தைகளை கொண்டுள்ள கேத், தனது பிரசவத்திற்கு பிறகு குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் வெளியே வந்து போஸ் கொடுத்தார்.
அப்படிப்பட்டவர் வயிற்று வலி சிகிச்சைக்கு முன்பும் பின்பும் புகைப்படத்தை வெளியிடாதது ஏன், இதையெல்லாம் நம்ப முடிகிறதா என கேள்வி எழுப்பி ஒரு எக்ஸ் பதிவு வைரலானது. மேலும் கேத் மிடில்டனை காணவில்லை என்றே லண்டன் மக்கள் சில சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனால் அரண்மனையில் சர்ச்சை நிலவியது.
இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்து வீடியோ மூலம் பேசியுள்ளார். அதில் அவர் "எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சையை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் குடும்ப நலன் கருதி நாங்கள் இந்த விவரங்களை வெளியே சொல்லாமல் இருந்தோம்.

எனக்கு புற்றுநோய் பாதிப்பு என தெரிந்தவுடன் எனக்கும் வில்லியம்ஸுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்தேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு காலம் பிடித்தது. இந்த கீமோ சிகிச்சையை அதே மருத்துவமனையில் தொடங்கியுள்ளேன். எங்கள் குழந்தைகளுக்கும் புரியும் கூறிவிட்டோம்.
தற்போது நான் நலமாக இருக்கிறேன். இதிலிருந்து மீண்டும் வர உதவும் விஷயங்களில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் மனதளவிலும் உடல் அளவிலும் வலுவாக உள்ளேன். இவ்வாறு கேத் மிடில்டன் தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு என்ன புற்றுநோய் என தெரியவில்லை.
கேத்துக்கு தற்போது 42 வயதாகிறது. அந்த வீடியோவில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு கேத் பேசுகிறார். அவரது உடல் சோர்வாகவும் முகம் வெளீர் என்றும் இருக்கிறது. கேத் உடல்நலம் பெற வேண்டும் என ஹாரியும் மேகனும் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். மன்னர் சார்லஸுக்கு புரோஸ்டேட் கேன்சர். அவரும் தனது அரச பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications