இன்று மன்னராகும் சார்லஸ்! முடிசூட்டு விழாவில் மருமகளும், பேரக்குழந்தைகளும் ஆப்சென்ட்.. ஏன் தெரியுமா
லண்டன்: பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கு இன்று முடிசூட்டு விழா நடைபெறுகிறது. இருப்பினும், இதில் அவரது மருமகள் மேகன் கலந்து கொள்ளப் போவதில்லை என்றே தெரிகிறது.
பிரிட்டன் நாட்டில் சார்லஸ் இன்று மன்னராகப் பதவியேற்றுக் கொள்கிறார். அவரது தாயார் ராணி எலிசபெத், கடந்தாண்டு வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், சார்லஸ் இன்று மன்னராகப் பதவியேற்றார்.

சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முடிசூட்டு விழா நடைபெறும் நிலையில், இதற்காக நாடு முழுக்க அவர்கள் கோலாகலமாக ரெடியாகி வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் அங்கே மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மன்னர் சார்லஸ்: பிரமாண்டமான விழாவில் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடைபெற உள்ள நிலையில், இன்று அனைவரது பார்வையும் அரச குடும்பத்தின் மீதே இருக்கும். 100 நாட்டுத் தலைவர்கள் மற்றும் உலகப் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். இருப்பினும், இந்த நிகழ்வில் மன்னர் சார்லஸ் மருமகளும் இளவரசர் ஹாரியின் மனைவியான மேகன் மார்க்லே கலந்து கொள்ள மாட்டார்.
இளவரசர் ஹாரி இந்த முடிசூட்டு விழாவில் கலந்துகொள்கிறார் என்ற போதிலும், மேகனும், அவர்களின் குழந்தைகள் - இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மே 6ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் முடிசூட்டு சேவையில் இளவரசர் ஹாரி கலந்துகொள்வார். அதேநேரம் இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் (ஹாரி- மேகன் குழந்தைகள்) கலிபோர்னியாவில் இருப்பார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
கலந்து கொள்ளவில்லை: இளவரசர் ஹாரிக்கும் அவரது தந்தை மற்றும் சகோதரர் இளவரசர் வில்லியம் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலையில், மேகன் இந்த முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு செப்டம்பரில், தனது பாட்டி ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் தான் சார்லஸ் மற்றும் வில்லியமுடன் ஹாரி இருந்தார். ஹாரி- மேகன் தம்பதி கடந்த 2020இல் அரச பதவிகளை விட்டு வெளியேறினர். அதன் பிறகு பிரிட்டன் முடியாட்சி குறித்து பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
ஊர்வலத்தில் இல்லை: ஹாரி அரச பதவிகளில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு இந்த முடிசூட்டு விழாவில் அதிகாரப்பூர்வ பங்கு இருக்காது. மேலும், அவர் ஊர்வலத்திலும் பங்கேற்க மாட்டார். இன்று மக்களை வாழ்த்த பால்கனியில் அரச குடும்பத்துடன் ஹாரி வருவாரா என உறுதிப்படுத்தப்படவில்லை.
சார்லஸ் தாயார் எலிசபெத் ராணி கடந்த செப்டம்பரில் இறந்தபோது 74 வயதான சார்லஸ் மன்னரானார். லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இன்று அவர் மன்னராக முடிசூட்டிக் கொள்கிறார். அதில் 360 வயதான செயின்ட் எட்வர்ட் மகுடம் அவருக்கு அணிவிக்கப்பட உள்ளது.
அவரது இரண்டாவது மனைவி கமிலா, ராணியாக முடிசூட்டப்படுவார். இந்த முடிசூட்டு விழாவில் கிறிஸ்துவ மத தலைவர்களைத் தவிர மற்ற மதங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். பிரிட்டன் மன்னரின் முடிசூட்டு விழா ஒன்றில் கிறிஸ்துவ தலைவர்கள் தவிர மற்ற மதத்தினர் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.
அங்கே பல தரப்பினரும் வாழும் நிலையில், அதைப் பிரதிபலிக்கும் வகையில், இப்படி மற்ற மத தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications