லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்ஸ்போர்டு பல்கலை. கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது... 70% ஆற்றல் மிக்கது... ஆய்வு முடிவில் அபாரம்..!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி 70% ஆற்றல்மிக்கது என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாக லான்செட் மருத்துவ இதழ் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகளை கண்டறியும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஆகிய நாடுகள் உலகின் மற்ற நாடுகளை காட்டிலும் கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் போட்டிபோட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ஆஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என உலகின் பிரபல மருத்துவ இதழான லான்செட் தெரிவித்துள்ளது. மேலும், 27,345 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த தகவலை வெளியிடுவதாக லான்செட் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி - அவசர பயன்பாட்டிற்கு அனுமதி கோரி... பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பம்..!கொரோனா தடுப்பூசி - அவசர பயன்பாட்டிற்கு அனுமதி கோரி... பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பம்..!

முதலில் அரை டோசும் அடுத்த வாரத்தில் முழு டோசும் அளிக்கப்பட்டதில் ஆக்ஸ்போர்டு பல்கலை. கொரோனா தடுப்பூசி 90% பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக லான்செட் இதழ் தெரிவிக்கிறது. இதனிடையே இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்ட்ராஜெனிகா தலைமை நிர்வாகி பாஸ்கல் சொரியட், கொரோனாவுக்கு எதிரான தங்கள் தடுப்பூசி பயனுள்ள வகையில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன எனக் கூறியுள்ளார்.

மேலும், இந்த தடுப்பூசி கொரோனாவை சமாளிக்கும் திறன் பெற்றுள்ளதாகவும் தடுப்பூசிக்கான ஒப்புதலை பெற உலகம் முழுவதும் உள்ள மருந்து அனுமதி வழங்கும் ஆணையங்களுக்கு ஆய்வு முடிவின் புள்ளிவிவரங்களை அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

English summary
Oxford Covid vaccine 70% effective shows lancet data
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X