லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனோ பாதிப்பை Dexamethasone குணப்படுத்துகிறது- லண்டன் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள்

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா பாதிப்பை டெக்சாமெத்தசோன் (Dexamethasone ) மருந்து குணப்படுத்துவதாக லண்டன் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவின் கொடூர தாக்குதலால் உலக நாடுகள் அனைத்துமே நிலைகுலைந்து போயுள்ளன. அமெரிக்காவில்தான் கொரோனாவின் பாதிப்பு படுமோசமாக உள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் இருந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசம்.. சீன அதிகாரிகள் கவலை தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசம்.. சீன அதிகாரிகள் கவலை

இந்தியாவின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

இந்தியாவின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

இந்தியாவின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் கொரோனாவை கட்டுப்படுத்த உதவுவதாக கூறப்பட்டது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இம்மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போதுமான பலனைத் தரவில்லை என கூறி அதற்கு வழங்கப்பட்ட அவசர அங்கீகாரத்தை அமெரிக்காவின் நிறுவனம் திருமப்ப் பெற்றிருக்கிறது.

ஆகஸ்போர்ட் தீவிர முயற்சி

ஆகஸ்போர்ட் தீவிர முயற்சி

இதேபோல் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். அவர்கள் உருவாக்கிய மருந்து குரங்குகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அதுவெற்றி பெறவில்லை.

மருந்தாக டெக்சாமெத்தசோன்

மருந்தாக டெக்சாமெத்தசோன்

இந்த நிலையில் டெக்சாமெத்தசோன் (Dexamethasone) மருந்து கொரோனா பாதித்தவர்களை குணப்படுத்துகிறது; கொரோனா பாதித்தவர்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது என ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

உயிரை காப்பாற்றும் டெக்சாமெத்தசோன்

உயிரை காப்பாற்றும் டெக்சாமெத்தசோன்

பொதுவாக அனைத்து நாடுகளிலும் குறைந்த விலையில் Dexamethasone மருந்து கிடைக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். இங்கிலாந்தில் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒருவர், இந்த Dexamethasone மருந்து செலுத்தப்பட்டதால் உயிர் பிழைத்திருக்கின்றார் என்கின்றனர் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள். இதனால் கொரோனா நோயாளிகளுக்கு Dexamethasone மருந்தை பயன்படுத்துவது என இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

English summary
Oxford scientists claimed to have discovered the first life saving drug Dexamethasone for Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X