60 ஆண்டுகள்! பேஷன் மாறினாலும் மாறாத அந்த ஹேண்ட் பேக்.! ஒரே மாடலை ராணி எலிசபெத் யூஸ் பண்ண என்ன காரணம்
லண்டன்: பிரிட்டன் ராணி எலிசபெத் கடந்த 60 ஆண்டுகளாகவே ஒரே ஹேண்ட் பேக்கையே பயன்படுத்தி வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா.
கடந்த 70 ஆண்டுகளாகப் பிரிட்டன் மகாராணியாக இருந்தவர் இரண்டாம் ராணி எலிசபெத். இவர் கடந்த 1952ம் ஆண்டு இங்கிலாந்து ராணியாக முடி சூடினார்.
சமீபத்தில் தான் இவர் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தது. இதற்கான கொண்டாட்டங்களும் கூட பிரிட்டனில் நடைபெற்றது.

ராணி எலிசபெத்
இருப்பினும், ராணி எலிசபெத் உடல்நிலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே மோசமடைந்தது. நிற்கவும் நடக்கவும் ராணி எலிசபெத் சிரமப்பட்டு வந்ததாகவே மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சூழலில் தான் கடந்த வியாழக்கிழமை அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து பிரிட்டன் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அங்கு விரைந்த நிலையில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.

இங்கிலாந்து அரச பரம்பரையினர்
உலகமே உற்று நோக்கும் நபர்களாகவே எப்போதும் இங்கிலாந்து அரச பரம்பரையினர் இருந்துள்ளனர். அவர்கள் அணியும் ஆடை தொடங்கி அனைத்தும் உலக நாடுகளால் ஒற்று நோக்கப்படும். அப்படித்தான் கடந்த 70 ஆண்டுகளாகவே ராணியாக இருந்த எலிசபெத் அணிந்த பேஷன் பலரது கவனத்தையும் ஈர்த்து. பெரும்பாலும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே ராணி எலிசபெத்தின் உடைகள் எப்போதும் இருக்கும்.

கருப்பு நிற ஹேண்ட் பேக்
இப்படி உடைகளை மாற்றி மாற்றி அணிந்தாலும் கூட, மகாராணி எலிசபெத் கடந்த 60 ஆண்டுகளாகவே அவர் ஒரே மாதிரியான ஹேண்ட் பேக்கையே பயன்படுத்தி வந்தார். உலக நாடுகளுக்கு எங்குச் சென்றாலும் அவர், அந்த ஒரே சிறிய கருப்பு நிற ஹேண்ட் பேக்கையே பயன்படுத்தி வந்தார். உலக பேஷன் டிசைனர்கள் பலரும் ஒற்று நோக்கிய பொருளாகவே அது நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.

ஹேண்ட் பேக்
இந்நிலையில், இது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் பிராண்டான லானரின் சி.இ.ஓ ஹெரால்ட் பாட்மர். கூறுகையில், "கையில் ஹேண்ட்பேக் இல்லை என்றால் தனது உடையலங்காரம் முழுமை அடைந்ததாக ராணி எப்போதும் கருதமாட்டார். அதேநேரம் நாங்கள் டிசைன் செய்து தரும் அனைத்தையும் அவர் அப்படியே அணிந்து கொள்ளவும் மாட்டார்.

60 ஆண்டுகள்
அவருக்கு என்ன தேவை என்பது அவருக்குத் தெரியும். எது தனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதைச் சரியாகத் தேர்வு செய்து, அதைத் தான் அவர் தேர்ந்தெடுத்து கொள்வார்" என்றும் அவர் குறிப்பிட்டார். உடைகளைத் தொடர்ந்து பேஷனுக்கு ஏற்றவாறு மாற்றி வந்த ராணி எலிசபெத் கடந்த 60 ஆண்டுகளாக ஒரே விதமான ஹேண்ட்பேக்கை பயன்படுத்தி வந்துள்ளார்.

என்ன காரணம்
இதற்கான காரணம் என்னவென்றால், 1950களில் பிரிட்டன் மகாராணியாக ராணி எலிசபெத் பதவியேற்ற சமயத்தில், அவரது தாயார் எலிசபெத் போவ்ஸ்-லியோன் இந்த மாடல் ஹேண்ட்பேக்கை வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது முதலே இந்த மாடல் ஹேண்ட்பேக்கை பயன்படுத்தி வருகிறார். இதனால் தான் ஆடை, அலங்காரங்கள் மாறினாலும் கூட அவரது ஹேண்ட் பேக் டிசைன் மாறவில்லை.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications