ரிஷி சுனக் அதிக ஓட்டு வாங்கியுள்ளார் ஓகே.. ஆனால் பிரிட்டன் பிரதமராவது சுலபம் இல்லை.. ஏன் தெரியுமா?
லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெறும் நிலையில் கட்சிக்குள் தீவிர போட்டி நிலவி வருகிறது. இதில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் களத்தில் முன்னணியில் உள்ளார். முன்னாள் நிதியமைச்சராக இருந்த அவருக்கு நிதி சார்ந்த நுணுக்கங்கள் தெரிந்திருந்தாலும் அவ்வளவு எளிதில் இந்த தேர்தலில் வென்றுவிட முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனை ஆட்டிப்படைத்து வரும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை காரணமாக அந்நாட்டு அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வருகிறது. பிரதமருக்கு எதிராக சொந்த கட்சி எம்.பிக்கள் 58 பேர் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பதவி விலகினர். இதனையடுத்து பிரதமர் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இதன் காரணமாக அடுத்த பிரதமருக்கான போட்டி தீவிரமாக நிலவி வருகிறது.

இந்த போட்டியில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கும் முன்னிலையில் இருந்து வருகிறார். ஆனால், லிஸ் ட்ரஸ், கெமி படேனோச் மற்றும் டாம் துகென்டாட் ஆகியோர் சக போட்டியாளர்களாக இருக்கின்றனர். ரிஷி சுனக் முதல் சுற்று வாக்கெடுப்பில் 88 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து பென்னி மோர்டான்ட் 67 வாக்குகள் பெற்றும், ட்ரஸ் லிஸ் 50 வாக்குகள் பெற்றும் அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றனர். எனவே போட்டி பலமாக உள்ளது.
ரிஷியை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் நிதியமைச்சராக பணியாற்றிய அனுபவம் உண்டு. இதனால் அந்நாட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளார். ஆனால் இது மட்டுமே முழு வெற்றிக்கு பங்களிக்காது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தற்போது நடைபெறுவது பிரதமருக்கான தேர்தல் மட்டுமல்ல அது கன்சர்வேட்டிவ் கட்சி தலைமைக்கான தேர்தல் என்பதால் கடந்த கால நிகழ்வுகளை அரசியல் விமர்சகர்கள் நினைவுபடுத்தியுள்ளனர்.
பிரிட்டனின் முந்தைய பிரதமர்களான அலெக் டக்ளஸ்-ஹோம், மார்கரெட் தாட்சர், ஜான் மேஜர், டேவிட் கேமரூன் மற்றும் தெரசா மே ஆகியோர் கட்சியின் சார்பில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் அவர்கள் பிரதமராக வெற்றிபெற்றார்கள். அதேபோல ஜான் மேஜர், தெரசா மே மற்றும் அலெக் டக்ளஸ்-ஹோம் ஆகியோருக்கு பொதுமக்கள் நேரடியாக வாக்களிக்கவில்லை. ஆனால் கட்சியின் தலைமைக்கான அதிகார போட்டியில் அவர்கள் வெற்றி பெற்று பிரதமராக செயல்பட்டனர்.

1964ல் கட்சிக்கான தலைமைக்கான போட்டி நடைபெற்றது. இப்போது இருப்பதை போன்று ஜனநாயகப்பூர்வமான நடைமுறைகள் அக்காலகட்டங்களில் இல்லை. கட்சியின் உறுப்பினர்கள் 'மேஜிக் சர்க்கிள்' எனப்படும் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். இப்படிதான் அலெக் டக்ளஸ்-ஹோம் ஓர் ஆண்டு (1963-64) பிரதமராக பணியாற்றினார். பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார்.
இதன் பின்னர்தான் கட்சியிலிருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கென பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. சொல்லப்போனால் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல் அவசியம் என்கிற நடைமுறையை கன்சர்வேட்டிவ் கட்சி 1964-65 காலகட்டங்களில்தான் அமல்படுத்தியது. பிரிட்டன் வரலாற்றில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக அறியப்படுகிற மார்கரெட் தாட்சர் கூட இது போன்று கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் நடைபெற்ற 1979ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றே ஆட்சியமைத்தார்.
ஆகவே பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்பதில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளன. கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டு பிரதமராக பணியாற்றி பின்னர் பொதுத் தேர்தலில் தோல்வியை சந்தித்த வரலாறும், இரண்டிலும் வெற்றிக் கண்ட வரலாறும் இந்த கட்சிக்கு உண்டு. இதைத்தான் அரசியல் விமர்சகர்கள் இப்போது நினைவுபடுத்துகின்றனர். எப்படியானாலும் ரிஷி சுனக் வெற்றிப் பெற வேண்டும் என்பதே இந்தியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications