இங்கிலாந்தில் டென்ஷன்: மன்னர் சார்லஸ், ராணி கமிலா மீது சரமாரி முட்டை வீச்சு- இளைஞர் கைது
லண்டன்: இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா சார்லஸ் மீது சரமாரியாக முட்டைகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து முட்டை வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்தின் மன்னராக பொறுப்பேற்ற சார்லஸ் மற்றும் கமிலா ஆகியோர் யோர்க் நகருக்கு சென்றனர். அங்கு பொதுமக்கள் மன்னருக்கும் ராணிக்கும் உற்சாக வரவேற்பளித்தனர். அந்த மக்களுடன் கலந்துரையாடி வாழ்த்துகளைப் பெற இந்த பயணம் மேற்கொண்டிருந்தார் மன்னர் மூன்றாம் சார்லஸ்.

மக்களுடன் மன்னர் சார்லஸ் உற்சாகமாக கலந்துரையாடி கொண்டிருந்தார். அப்போது சார்லஸ் அருகே ஒரு பொருள் முதலில் விழுந்து தெறித்தது. இதன் பின்னர் சரமாரியாக அந்த பொருட்கள் வீசப்பட்டு உடைந்து சிதறியது. பின்னர்தான் மன்னர் சார்லஸ் மீது சரமாரியாக முட்டைகள் வீசப்பட்டது தெரியவந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அந்த இளைஞரை கைது செய்த போது சில முழக்கங்களை எழுப்பினாராம். அதாவது இங்கிலாந்து அடிமைகளின் ரத்தத்தால் கட்டப்பட்ட தேசம் என விமர்சித்து முழக்கமிட்டாராம் அந்த இளைஞர்.
யோர்க் நகரில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் மீது முட்டைகள் வீசப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை முன்வைத்து விவாதங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
🚨 BREAKING NEWS: Egg thrown at “King” Charles during visit to York as man detained by police.
— Terrence Daniels (Captain 🍀 Planet) (@Terrence_STR) November 9, 2022
Protester was arrested while screaming “this country was built on slavery”
The monarchy is a complete yoke at this point 😏 pic.twitter.com/rc5L0Zufmx
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications