விஜய் மல்லையா முயற்சிக்கு பெரும் அடி.. கைவிட்டது பிரிட்டன் ஹைகோர்ட்
லண்டன்: வங்கி மோசடி மன்னன், விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்று வாழ்க்கை நடத்தி வருகிறார், விஜய் மல்லையா.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் தொடர் முயற்சியின் பலனாக, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில், இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. விஜய் மல்லையாவுக்கு எதிரான வாதத்தை ஏற்றுக் கொண்ட, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில், விஜய் மல்லையா அப்பீல் செய்திருந்தார். இதுகுறித்த விசாரணையில், மல்லையாவின் மேல்முறையீட்டை பிரிட்டன் ஹைகோர்ட் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் ஹைகோர்ட்டும் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா அப்பீல் செய்வதுதான் எஞ்சிய ஒரே வழியாகும். அதற்கு இன்னும் 6 வாரங்கள் கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications