லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரிட்டன் தேர்தல்.. மெஜாரிட்டி பெற்றார் போரிஸ் ஜான்சன்.. மீண்டும் பிரதமர் ஆகும் வலதுசாரி தலைவர்!

பிரிட்டனில் நடந்த நாடளுமன்ற பொதுத்தேர்தலில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மை பெரும் நிலையை அடைந்துள்ளார்.

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டனில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளார். இதனால் அவர் மீண்டும் அந்நாட்டு பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

உலகம் முழுக்க தற்போது வலதுசாரி தலைவர்களின் வளர்ச்சி வேகம் எடுத்து வருகிறது. இந்தியாவில் பிரதமர் மோடி, இலங்கையில் கோத்தபய ராஜபக்சே தொடங்கி உலகம் முழுக்க வலதுசாரி தலைவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரிட்டனிலும் தற்போது வலதுசாரி கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் போரிஸ் ஜான்சன் அங்கு பெரும்பான்மை இழந்த காரணத்தால் தேர்தல் நடத்த அழைப்பு விடுத்தார்.

என்ன காரணம்

என்ன காரணம்

கடந்த மே மாதம் முன் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே விலகினார். ஐரோப்பா யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்று அங்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பிரிக்சிட் மசோதாவை தெரசா மே தாக்கல் செய்தார். ஆனால் அவரின் மசோதாவிற்கு சொந்த கட்சி எம்பிக்களே ஆதரவு அளிக்கவில்லை. இதனால் அந்த மசோதா தோல்வியில் முடிந்தது.

விலகினார்

விலகினார்

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தெரசா மே தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனால் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் பிரதமர் ஆனார். ஆனால் இவராலும் பிரக்சிட் மசோதாவை தாக்கல் செய்து அதை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் தனது ஆதரவு எம்பிக்களை அவைக்கு கொண்டு வரும் வகையில், மொத்தமாக பொது தேர்தலுக்கு போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்தார் .

என்ன அழைப்பு

என்ன அழைப்பு

இந்த நிலையில் பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை வகிக்கிறது. அங்கு மொத்தம் 650 இடங்கள் உள்ளது இதில் 326 இடங்களில் வென்றால் பெரும்பான்மை கிடைக்கும் . இதில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 364 இடங்களில் ஏற்கனவே வென்றுவிட்டது. இதனால் போரிஸ் ஜான்சன் ஆட்சிக்கு வருவது உறுதி ஆகியுள்ளது.

இன்னொரு பக்கம் என்ன

இன்னொரு பக்கம் என்ன

இதனால் அந்த கட்சி 47 இடங்களில் புதிதாக வென்றுள்ளது. இன்னொரு பக்கம் அந்நாட்டின் பிரதான எதிர்கட்சிக்கான ஜெர்மி கார்பினின் லேபர் கட்சி பல இடங்களில் தோல்வியை தழுவி இருந்த எம்பிக்களை இழந்துள்ளது. அந்த கட்சி 203 இடங்களில் வென்றுள்ளது. சென்ற தேர்தலில் வென்ற 53 இடங்களை அந்த கட்சி இழந்துள்ளது.

மீண்டும் வருகிறார்

மீண்டும் வருகிறார்

இதனால் மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமர் ஆகிறார். இவர் பெரும்பாலும் அங்கு மீண்டும் பிரக்சிட் மசோதாவை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. பிரக்சிட் மசோதாவின் முதற்கட்ட வெற்றி இது என்று ஏற்கனவே போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

யார் இவர்

யார் இவர்

போரிஸ் ஜான்சன் இயல்பாகவே வலதுசாரி கொள்கை கொண்டவர். இவரின் கன்சர்வேட்டிவ் கட்சியில் இருக்கும் மற்ற முக்கிய தலைவர்களை விட இவர் அதிகமாக வலதுசாரி கொள்கை கொண்டவர். இவருக்கும் டிரம்பிற்கும் அத்தனை நெருக்கம். அவரும் வலதுசாரி கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல்தான் இந்திய பிரதமர் மோடியும் வலதுசாரி கொள்கை கொண்டவர் ஆவார்.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி ஏற்றதில் இருந்து அங்கு நிறைய மாற்றங்களை அவர் கொண்டு வருகிறார். அரசில் உயர் பதவியில் இருக்கும் இடதுசாரி கொள்கை கொண்டவர்களை அகற்றிவிட்டு வலதுசாரி கொள்கை கொண்டவர்களை பதவியில் அமர்த்தி வந்தார்.

English summary
UK general election results: Boris Johnson's conservative party takes an early lead, may get majority.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X