சீனா+ ரஷ்யா உலகிற்கே ஆபத்து! 100 வருடத்தில் இப்படி ஒன்று நடந்ததே இல்லை! பறந்த சீக்ரெட் ரிப்போர்ட்
லண்டன்: தற்போதைய சூழலில் உலகில் பல்வேறு போர்களும், மோதல்களும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே உலக நாடுகளுக்கு தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்துபவை என்ன என்பது குறித்து பிரிட்டன் சீக்ரெட் ரிப்போர்ட்டை வெளியிடுகிறது. அதில் ரஷ்யா, சீனா, ஈரான் ஆகியவை உலகிற்கு எந்தளவுக்கு ஆபத்தாக இருக்கிறது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
இப்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் மோதல் இருக்கிறது. ரஷ்யா உக்ரைன் மோதல், இஸ்ரேல் ஹமாஸ் போர், சீனா- தைவான் பதற்றம் என ஏகப்பட்ட மோதல்களை குறிப்பிடலாம். இதற்கிடையே உலக நாடுகளுக்கு இப்போது என்ன அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது குறித்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை ஒரு ரிப்போர்ட்டை உருவாக்கியுள்ளது.

சீக்ரெட் ரிப்போர்ட்
அதில் ரஷ்யா மற்றும் சீனாவால் ஏற்படும் சவால்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ரிப்போர்ட்டை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதில் ராணுவத்திற்கு அடுத்த 10 ஆண்டுகள் என்ன மாதிரியான உபகரணங்கள், சேவைகள் தேவைப்படும் என்பது குறித்தும் விளக்கப்பட்டு இருக்கும். ரஷ்யாவால் ஏற்படும் உடனடி மற்றும் அழுத்தமான ஆபத்தை எச்சரிக்கும் வகையிலான கருத்துகளும் இதில் இருப்பதாகப் பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆபத்து
முன்னாள் நேட்டோ பொதுச் செயலாளர் ஜார்ஜ் ராபர்ட்சன் தலைமையிலான குழு இந்த முழு ரிப்போர்ட்டையும் தயாரித்துள்ளது. அவரது டீமில் முன்னாள் அமெரிக்க அதிபரின் ஆலோசகராக இருந்த பியோனா ஹில், முன்னாள் பிரிட்டிஷ் தளபதி ரிச்சர்ட் பாரோன்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர். 130 பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணம், சீனாவை ஒரு நவீன மற்றும் தொடர்ச்சியாக இருக்கும் சவால் என்றும் அது சீனா சில சமயங்களில் ரஷ்யாவுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளைப் பிராந்திய சீர்குலைப்பாளர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2022ல் உக்ரைனுக்கு எதிராகப் போரை ஆரம்பித்த ரஷ்யாவுக்குப் பல மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டன. ஆனால், சீனா, ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் மட்டும் ரஷ்யாவுடன் பல முக்கிய ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது பிரிட்டன் ராணுவம் ஒரு லட்சம் வீரர்களைக் கொண்டிருக்கிறது. பிரிட்டனின் ராணுவ பலம் குறித்தும் அதில் விளக்கப்பட்டுள்ளது.
100 ஆண்டுகளில் நடக்காத விஷயம்
சீனா-ரஷ்யா அச்சுறுத்தலைத் தான் ஐரோப்பா மிகப் பெரிய சவாலாகக் கருதுவதாக ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட ராஜதந்திரி காஜா கல்லாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கடந்த 100 ஆண்டுகளில் நடக்க விஷயங்களை இப்போது சீனாவும் ரஷ்யாவும் சேர்ந்து செய்கின்றன.. சர்வதேச பாதுகாப்பு இந்த நாடுகளின் நடவடிக்கையால் கவலைப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நீங்கள் சீனாவைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் ரஷ்யாவைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்" என்றார்.
ராணுவத்தை விரிவுபடுத்த முடிவு
மேலும், பிரிட்டன் ராணுவத்தை வலுப்படுத்தும் வகையில், அதன் பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்க ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் குறைந்தது ஆறு புதிய தொழிற்சாலைகளை அமைக்கவும் இங்கிலாந்து அரசு முடிவு செய்திருப்பதாக நேற்று தெரிவித்தது. இது தொடர்பாகப் பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம், "உக்ரைனிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் பயன்படுத்தி வரும் காலத்தில் ஏற்படும் மோதல்களைச் சமாளிக்க 1 பில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பிரிட்டன் முதலீடு செய்யும்
குறிப்பாக நமது ஆயுதப் படைகளுக்கு இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு மிக வேகமாகத் தேவையான ஆயுதங்கள் வழங்கப்படும். இதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வேகமான மற்றும் துல்லியமான தகவல் தொடர்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications