அமெரிக்காவை டம்மியாக்கும் ஐரோப்பா நாடுகள்? உக்ரைன் போரில் திடீர் ட்விஸ்ட்.. என்ன செய்வார் டிரம்ப்
லண்டன்: உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவமானப்படுத்தி அனுப்பினார். தற்போது விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இப்படியான சூழலில் தான் உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவிடம் அமெரிக்கா தன்னிச்சையாக பேசி வருகிறது. இதற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக்கொள்ளாத நிலையில் அமெரிக்காவின் பவரை பிடுங்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் ஒரு செயலை முன்னெடுத்துள்ளனர். இதற்கு டொனால்ட் டிரம்ப் - விளாடிமிர் புதின் ஒப்புக்கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட டிரம்ப் ஆர்வம் காட்டுகிறார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவுதி அரேபியாவில் சந்தித்து பேசினர். அப்போது போர் நிறுத்தம் தொடர்பாக இருதரப்பும் விவாதித்தனர். ஆனால் இதில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் ஜெலன்ஸ்கி கோபமானார்.

போர் நடவடிக்கையால் உக்ரைன் தான் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உக்ரைனை அழைக்காமலே அமெரிக்கா தன்னிச்சையாக ரஷ்யாவிடம் பேசுவதை அவர் விரும்பவில்லை. இதனால் அமெரிக்கா - ரஷ்யா பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் போர் நிறுத்த முடிவுக்கு உக்ரைன் உடன்பாடாது என்று தடாலடியாக கூறினார். இதனால் டிரம்ப் கடும் கோபமடைந்தார்.
இதைடுத்து ஜெலன்ஸ்கியை கடுமையாக அவர் விமர்சித்தார். மேலும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து ஜெலன்ஸ்கியிடம் டொனால்ட் டிரம்ப் பேசினார். அப்போது இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அந்த சமயத்தில் இருதலைவர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர். அமெரிக்காவின் போர் நிறுத்தம் தொடர்பான கருத்துகளுக்கு ஜெலன்ஸ்கி ஒப்புக்கொள்ளவில்லை. போர் நிறுத்தம் பற்றி பேசும் போது ரஷ்யாவை குறை சொல்வதிலும், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா செயல்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். அதோடு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொலைகாரன் என்றும் கூறினார். அதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா எதுவும் செய்யவில்லை. அமெரிக்க அதிபர்கள் யாரும் உக்ரைனுக்கு உதவவில்லை. இப்போது ரஷ்யாவுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதால் ஒருநாள் புதின் உங்களையும் தாக்குவார் என்று கூறினார்.
இது டிரம்பை கோபப்படுத்தியது. அவர் ஜெலன்ஸ்கியை கடுமையாக விளாசினார். ‛‛ரஷ்யாவை எதிர்த்து சண்டை செய்ய உக்ரைனிடம் ஒன்றுமே இல்லை. அமெரிக்கா தனது உதவியை நிறுத்தினால் மூன்றே நாளில் கதை முடிந்து விடும். நாங்கள் தான் உங்களுக்கு உதவி செய்தோம். கொஞ்சமாவது நன்றி விசுவாசம் வேண்டும். 3 ம் உலகப்போருடன் விளையாடுகிறீர்கள். நாட்டு மக்களின் உயிர்களோடு விளையாடுகிறீர்கள். ரஷ்யாவுடன் ஆக்கப்பூர்வமாக பேச வேண்டும். ஆனால் அதை விட்டு குற்றம்சாட்டுவது சரியில்லை. அமெரிக்காவுக்கு என்ன நடக்கும் என்று பாடம் நடத்தும் இடத்தில் இப்போது நீங்கள் இல்லை. எங்களின் டீலுக்கு ஒகே என்றால் மீண்டும் வெள்ளை மாளிகை வாருங்கள் என்று கூறி வெளியே அனுப்பினார்.
இதனால் அவமானத்துடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவின் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினர்.
இதனால் அமெரிக்காவை விட்டு ஐரோப்பிய நாடுகளை நம்ப தொடங்கி உள்ளார் ஜெலன்ஸ்கி. இதனால் தான் உடனடியாக பிரிட்டன் பிரதமர் 2 நாள் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தார்.
இந்த மாநாட்டில் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், உக்ரைன் உட்பட பல ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் லண்டனில் கூடினர். நேட்டோ கூட்டமைப்பில் இருக்கும் மற்ற சில நாட்டு தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்றனர்.
அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் இந்த மாநாடு நடந்தது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இடையே மோதல் உள்ளது. இதனால் எந்த காரணம் கொண்டும் நாம் உக்ரைனை கைவிடக்கூடாது என்று ஐரோப்பிய தலைவர்கள் உறுதியேற்றனர்.
மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுக்கான ஒப்பந்தத்தை தனியாக நாமே தயாரிக்க வேண்டும். அதில் உக்ரைன் மக்கள் மற்றும் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான அம்சங்களை சேர்க்க வேண்டும். அதன்பிறகு அந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவிடம் வழங்கி ரஷ்யாவிடம் பேச வேண்டும். இதன்மூலம் போர் நிறுத்தத்தில் ஐரோப்பியாவின் பங்கு என்பது இருக்கும். அதேபோல் அமெரிக்காவை புறக்கணிக்காத நிலை உருவாகும். அதுமட்டுமின்றி நாம் உறுப்பினராக உள்ள நேட்டோவில் சேர்க்க விரும்பி போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு செய்யும் பெரிய உதவியாகவும் இருக்கும் என்று ஐரோப்பிய தலைவர்கள் கூறினர்.
அதன்படி உக்ரைன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போர் நிறுத்த வரைவு ஒப்பந்தத்தை தயார் செய்தனர். இருப்பினும் இந்த போர் நிறுத்தம் தொடர்பாக ஐரோப்பிய தலைவர்கள் தயாரித்த ஒப்பந்தத்தில் என்ன மாதிரியான அம்சங்கள் உள்ளன என்பது பற்றி விபரம் வெளியாகவில்லை. இன்னும் சில நாட்களில் இந்த வரைவு ஒப்பந்தத்தை அமெரிக்கா வசம் ஒப்படைக்க உள்ளனர். அதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டு, ரஷ்யாவிடம் பேச்சு நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது ஐரோப்பிய நாடுகளின் பரிந்துரையாக இருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா கையில் இருக்கும் ஒப்பந்தத்தில் உக்ரைனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பெரிய அளவில் உடன்பாடு இல்லை. அதாவது அமெரிக்காவின் ஒப்பந்தத்தில் உக்ரைனுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சங்கள் இல்லை என்பது தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதனை சரி செய்யும் வகையில் தான் புதிய ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்கா ஏற்குமா? ஒருவேளை அமெரிக்கா ஏற்றால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதனை ஏற்று போரை நிறுத்துவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஐரோப்பிய நாடுகள் தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வந்துள்ளன. அதோடு ரஷ்யாவிடம் பேச தங்களை ஒரு புரோக்கர்போல் தான் பயன்படுத்த ஐரோப்பிய நாடு நினைக்கிறது என்று டிரம்ப் எண்ணலாம். ஒருவேளை அப்படி எதுவும் நினக்காமல் ஐரோப்பிய நாடுகளின் புதிய ஒப்பந்தத்தை அமெரிக்கா, ரஷ்யா ஏற்றுக்கொண்டு போரை நிறுத்தும் பட்சத்தில் அது உக்ரைன் மக்களுக்கு மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளுக்கும் கிடைத்த பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். இதன்மூலம் அமெரிக்காாவை விட போர் நிறுத்தத்தில் ஐரோப்பிய நாடுகளின் பங்கு தான் அதிகம் என்ற வரலாறு உருவாகும். என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த பிளான் எந்த அளவுக்கு வொர்க்கவுட் ஆகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications