இதுதான் சுக்கிர திசையா.. சாதாரண கல்லுனு குப்பையில் போட சென்ற பெண்.. கடைசியில் அது ரூ 20 கோடி வைரம்!
லண்டன்: வடகிழக்கு இங்கிலாந்தில் பெண் ஒருவர் பல ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த ஆடை ஆபரணங்களை விற்பனை செய்ய சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாதாரண கற்கள் என நினைத்திருந்த நிலையில் அவை 20 கோடி மதிப்புள்ள வைரக் கற்கள் என தெரியவந்தது.
அந்த வைரத்தை வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நியூகேஸ்டிலிலிருந்து ஏலத்திற்கு விடப்படவுள்ளது. இந்த வைரம் எப்படி கிடைத்தது என்பது குறித்து அந்த ஏலக் கடைக்காரர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள்.
Memesசேலை, சுடிதாருக்கு முதல் மாடி.. ஒரே ஒரு சட்டை வாங்க 6 மாடி ஏறணுமா?.. தீபாவளி பரிதாபங்கள்!
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் கடந்த ஜூன் மாதம் ஒரு பெண் பை நிறைய நகைகளுடன் எங்கள் கடைக்கு ஏலம் எடுக்க வந்திருந்தார். அந்த ஆபரணங்களை அவர் நீண்ட காலமாக சேர்த்து வைத்திருந்துள்ளார். அதில் இருந்த கற்களை அவர் சாதாரண கற்கள் என நினைத்தார்

சந்தேகம்
ஆனால் அந்த கற்கள் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த கல்லை வைரத்தை ஆய்வு செய்யும் எனது நண்பருக்கு அனுப்பி வைத்தேன். அப்போது அவர் அந்த கல் வைரம்தான் என்றார். மேலும் அது 34.19 காரட் எடை கொண்டது என்றார். இதையடுத்து அந்த வைரத்தை லண்டனில் உள்ள எங்கள் நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கும் அனுப்பி சோதனை செய்தாகிவிட்டது.

ஆய்வு
அந்த வைரத்தை லேசர் வழியாக ஆய்வு செய்த போது அது பெல்ஜியம் நாட்டில் ஆன்ட்வெர்ப்பில் எச்ஆர்டி டைமன்ட் விற்பனை பரிசோதனை கூடத்தில் இருந்து வாங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வைரம் இந்த மாதம் 30 ஆம் தேதி நள்ளிரவு ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து அந்த கற்களை கொடுத்த பெண்ணிடம் தகவல் தெரிவித்துவிட்டோம்.

விலை மதிப்பிலானது
இந்த வைரம் மிகவும் அதிக விலை மதிப்புடையது என்பதால் இது எங்கே கிடைத்தது என அந்த பெண்ணிடம் கேட்டதற்கு அவர் எங்கிருந்து கிடைத்தது என்பது நினைவில்லை என தெரிவித்துவிட்டார். ஆனால் அண்டை வீட்டார் கூறியதால் இந்த ஆபரணங்களை எங்களிடம் கொண்டு வந்ததாகவும் இல்லாவிட்டால் அவற்றை குப்பைத் தொட்டியில் போட்டியிருப்பேன் என்றும் அந்த பெண் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை
இதுதான் சுக்கிர திசை அடிப்பது போல! சாதாரண கல் என நினைத்த நிலையில் அவை 20 கோடி மதிப்பிலான வைரம் என சோதனையில் தெரியவந்துள்ளது. நிச்சயம் அந்த பெண் அதிர்ஷ்டசாலிதான். இதைவிட அந்த ஏலக் கடைக்காரர்களை பாராட்ட வேண்டும், அது சாதாரண கல் என அந்த பெண் நினைத்த போது ஆமாங்க இது சாதாரண கல் என பொய் சொல்லாமல் உண்மையை சொல்லியது பாராட்டுக்குரியதே! பக்கத்து வீட்டுக்காரர் செய்த புண்ணியம், இன்று அந்த பெண் கோடீஸ்வரியாக போகிறார்!