ஆக்சிஜன் சப்ளை கட்டானதால் 16 பேர் இறக்கவில்லை.. ஆக்ரா மருத்துவனை மீது தவறு இல்லை. விசாரணை குழு
லக்னோ: உத்தரபிரதேச ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை, கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தினால் என்ன ஆகும் என்பதை அறிய விபரீத முயற்சி செய்து பார்த்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக ஏப்ரல் 27 அன்று ஐந்து நிமிடங்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் துடிதுடித்து 22 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
தற்பெருமையாக ஆக்சிஜனை நிறுத்தியது குறித்து பேசிய வீடியோ வைரலானதால் மருத்துவனை உரிமையாளர் மீது வழக்கு பாய்ந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக மருத்துவமனை உரிமையாளர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 16 பேர் ஆக்சிஜன் பிரச்சனை காரணமாக இறக்கவில்லை என்றும் தவறான செய்திகள் பரவிவிட்டதாகவும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஆக்ராவின் ஸ்ரீ பராஸ் மருத்துவமனையில் 5 நிமிடங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது. அதாவது எந்த நோயாளி பிழைக்கின்றனர், யார் தாங்குகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக செய்து பார்க்கப்பட்டதாக கூறப்பட்டது. இதன் மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரியாகக் கையாள முடியும் என்றும் காரணம் கூறப்பட்டது,
22 நோயாளிகள் பலியாக 74 பேர் பிழைத்தனர்.

ஊடங்களில் தகவல்
பராஸ் மருத்துவமனை உரிமையாளர் அரிஞ்ஜய் ஜெயின் வீடியோவில் மேற்கண்டவாறு பேசியதாக சமூக ஊடகங்களில் வெளிவந்தது. இதனையடுத்து உரிமையாளர் மீது மாவட்ட மேஜிஸ்ட்ரேட் வழக்குப் பதிவு செய்தார். மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது உரிமம் ரத்து செய்யப்பட்டது.

யாரும் சாகவில்லை
ஆனால் குறிப்பிடட ஏப்ரல் 26, 27 தேதிகளில் ஆக்சிஜன் பிரச்சனையால் மரணம் நிகழவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது. . 22 பேர் மரணம் என்பதையும் மறுத்தது. ஆக்சிஜன் துண்டிக்கப்படவில்லை என்றும் கூறியது. மேலும் மருத்துவனை உரிமையாளர் பேசியதாக வெளியான வீடியோவும் பொய் என்றும் கூறியது.

மருத்துவனை விடுவிப்பு
இதையடுத்து உத்தரப்பிரதேச மாநில அரசு ஆக்ரா மருத்துவனை விவாகரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையின் முடிவில் மருத்துவனை மீது எந்த தவறும் இல்லை என்றும் ஆக்சிஜன் பிரச்சனையால உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் பாதிப்பு
விசாரணைக் குழு தனது அறிக்கையில், மருத்துவமனையில் நடந்த 16 இறப்புகளில் எதுவுமே ஆக்சிஜன் துண்டிக்கப்பட்டதாக கூறப்படும் பிரச்சனையால் ஏற்படவில்லை. அனைத்து நோயாளிகளும் மோசமான உடல்பாதிப்பு அல்லது கடுமையான கொமொர்பிடிட்டிகளைக் கொண்டிருந்தார்கள்.
16 நோயாளிகளில் 14 பேருக்கு பல்வேறு உடல் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. மீதமுள்ள இரண்டு நோயாளிகளின் அறிக்கையில் அதிக HRCT தீவிரத்தன்மை (மார்பில் தொற்று) மற்றும் அழற்சி இருப்பது காட்டின. அனைத்து நோயாளிகளும் கோவிட் நெறிமுறைகளின்படி சிகிச்சை பெற்றனர், மேலும் ஆதாரங்களை பரிசோதித்த பின்னர் நோயாளிகள் எவருக்கும் ஆக்ஸிஜன் வழங்கல் துண்டிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது என்று குழு தெரிவித்துள்ளது.

உரிமையாளர் விடுவிப்பு
ஆக்சிஜன் துண்டிக்கப்பட்டதால் நோயாளிகள் இறந்தனர் என்பது முற்றிலும் பொய். ஆக்ஸிஜன் விநியோகத்தை துண்டித்து எந்த விபரீத பயிற்சியும் நடத்தப்படவில்லை. யாருடைய ஆக்ஸிஜன் சப்ளை துண்டிக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. முற்றிலும் வதந்தி. தவறானது என்று மருத்துவனை உரிமையாளர் அரிஞ்ஜய் ஜெயின் பேசியதை விசாரணைக்குழு அறிக்கையில் மேற்கோள் காட்டி உள்ளது. இந்த சூழலில் தான் மருத்துமனை மீது எந்த தவறும் இல்லை என்று வழக்கில் இருந்து அதன் உரிமையாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications