பயங்கர சத்தம்.. தகர்ந்த சுவர்! சிறுவன் பரிதாப பலி - வெடித்தது குண்டு அல்ல.. LED டிவி - உபியில் பரபர
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் எல்.இ.டி. டிவி வெடித்துச் சிதறியதில் அதை பார்த்துக்கொண்டிருந்த 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே செல்போன், எலெக்ட்ரிக் பைக் ஆகியவை வெடித்து அதை பயன்படுத்துபவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் முதல் முறையாக எல்.இ.டி. தொலைக்காட்சி வெடித்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஓமேந்திரா. இவர் தன்னுடைய வீட்டில் உள்ள எல்.இ.டி. டிவியை குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த டிவி வெடித்துச் சிதறி இருக்கிறது.

4 பேர் படுகாயம்
சத்தம் கேட்ட அண்டை வீட்டார் அங்கு ஓடி வந்து பார்த்தபோது தொலைக்காட்சி வெடித்து 4 பேர் படுகாயமடைந்தது தெரியவந்தது. தொலைக்காட்சியின் சிதறிய துண்டுகள் எதிரில் இருந்த சிறுவன் ஓமேந்திரா மீது பாய்ந்துள்ளன. அவரது கண், முகம், கழுத்து, மார்பு பகுதிகளில் தொலைக்காட்சியின் துண்டுகள் குத்தி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் பலி
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஓமேந்திராவின் தாய், அவரது நண்பர் கரண் ஆகியோரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகர்ந்த சுவர்
தொலைக்காட்சி வெடித்த போது, அது மாட்டி வைக்கப்பட்டிருந்த சுவரும் தகர்ந்து இருக்கிறது. ஓமேந்திரா வீட்டில் பலத்த வெடித்த சத்தம் கேட்டு புகை வந்ததால் சிலிண்டர் வெடித்துவிட்டது என்று தாங்கள் நினைத்ததாக அண்டை வீட்டில் வசித்து வந்த வினிதா என்ற பெண் தெரிவித்து உள்ளார்.

அதிர்ந்த வீடு
இதுகுறித்து சிறுவன் ஓமேந்திராவின் உறவினர் மோனிகா கூறுகையில், "நாங்கள் வேறொரு அறையில் இருந்தபோது. அப்போது தொலைக்காட்சி வெடித்தது. இது மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பாக அது இருந்தது. எங்கள் ஒட்டுமொத்த வீடும் இதனால் அதிர்ந்தது. தொலைக்காட்சி மாட்டப்பட்டு இருந்த சுவற்றின் ஒருபகுதி தகர்ந்துவிட்டது." என்றார்.

போலீஸ் விசாரணை
இதுகுறித்து காசியாபாத் போலீஸ் அதிகாரி ஞானேந்திர சிங் தெரிவிக்கையில், "2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் தொலைக்காட்சி வெடிப்பில் படுகாயமடைந்தனர். ஒரு சிறுவன் மட்டும் உயிரிழந்துவிட்டார். ஆரம்பக்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கிறோம்." என்றார்.

மின்வாரியமே காரணம்
அதிக வோல்டேஜ் காரணமாக டிவி வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், எங்கள் வீடுகளில் கூடுதல் மற்றும் குறைவான வால்டேஜ் மாற்றம் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மின்வாரியமே இதுபோன்ற வழக்குகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications