லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பசு பாதுகாப்பு பெயரில்.. வன்முறையில் ஈடுபட்ட இந்து யுவ வாகினி அமைப்பு, யோகிக்கு ஆதரவாக பிரச்சாரம்

By
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய யுவ வாகினி அமைப்பு களமிறங்கியிருக்கிறது.

பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. வரும் பிப்ரவரி 10ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பாளர்களை அம்மாநில கட்சிகள் அறிவித்து வருகின்றன.

ராமர் கிட்டவே கேட்டேன்.. நல்லவேளை அயோத்தியில் யோகி போட்டியிடலை.. புயலை கிளப்பிய ராமர் கோவில் பூசாரி! ராமர் கிட்டவே கேட்டேன்.. நல்லவேளை அயோத்தியில் யோகி போட்டியிடலை.. புயலை கிளப்பிய ராமர் கோவில் பூசாரி!

 உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேச பாஜக மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெறும் என்று தேர்தல் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால், பாஜகவை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி பலமான கட்சியாக தேர்தலை எதிர்கொள்கிறது. உத்தரப்பிரதேசத்தில் நான்குமுனை போட்டி இருந்தாலும், பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிக்குத்தான் அதிக போட்டி இருக்கும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன.

 யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது முதன்முதலாக தேர்தலில் போட்டியிடுகிறார். யோகி அயோத்தியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜக மேலிடம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தனது சொந்தத் தொகுதியான கோரக்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார் யோகி. இதற்கான முழு ஏற்பாடுகளை பாஜக செய்து வருகிறது. அவரை எதிர்த்து போட்டியிட தயார் என்று மருத்துவர் கஃபீல் கான் தெரிவித்துள்ளார்.

 இந்து யுவ வாஹினி

இந்து யுவ வாஹினி

இந்நிலையில், 2002 -ல், யோகி ஆதித்யநாத் நிறுவிய இந்து யுவ வாஹினி என்ற இளைஞர் அமைப்பு யோகிக்காக கோரக்பூரில் பிரச்சாரம் செய்யப் போகிறது. இந்து வாஹினி அமைப்பின் உறுப்பினர்கள் ஏற்கெனவே கோரக்பூர் தொகுதியில் நேரடியாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். வாஹினி நிர்வாகிகள் தினசரி கூட்டங்களை நடத்தி, அவர்களின் பிரச்சார உத்திகளை வகுத்து வருகிறார்கள்.

 பிரசாரம்

பிரசாரம்

''எங்கள் மகாராஜ் ஜி யோகி ஆதித்யநாத் தேர்தலில் போட்டியிடுவதால், எங்கள் பொறுப்பு அதிகரித்துள்ளது. எங்கள் முழு கவனம் சமூக ஊடக பிரச்சாரத்தில் உள்ளது. நாங்களும் பாஜக-வும் தனித்தனியாக கூட்டங்களை நடத்துகிறோம். எங்களின் ஒட்டுமொத்த குறிக்கோளும் யோகி ஆதித்யநாத்தை வெற்றி பெற வைப்பதுதான்'' என வாஹினி அமைப்பின் கோரக்பூர் பொறுப்பாளர் ரிஷி மோகன் வர்மா தெரிவித்துள்ளார். இந்து காவலர்கள் என்று கூறி லவ் ஜிகாத் எதிர்ப்பது, பசு பாதுகாப்பு பெயரில் மாட்டிறைச்சி வைத்திருப்போரை எதிர்ப்பது, தாக்கியது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர்கள் தான் இந்த வாகினி அமைப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
UP assembly Election: Chief Minister Yogi Adityanath is contesting the elections for the first time. The Yuva Vagini organization has launched a campaign in support of Uttar Pradesh Chief Minister Yogi Adityanath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X