லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாப்பாட்டுக்கு முண்டியடிப்பு: 'ஆதார் கார்டு இல்லன்னா விருந்து நோ'.. உபியில் கல்யாண வீட்டில் கூத்து!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு கல்யாண வீட்டில் விருந்து சாப்பிடுவதற்கு தெரிந்தவர்கள்.. தெரியாதவர்கள்.. என முண்டியடித்துக்கொண்டு கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், ஆதார் கார்டு இல்லாதவர்களுக்கு சாப்பாடு வழங்க மறுத்து கல்யாண வீட்டினர் கெடுபிடி விதித்த சம்பவம் நடந்துள்ளது.

கல்யாண வீட்டில் மணமக்களுக்குப் பிறகு அதிகம் பேசப்படுவது அங்கு நடக்கும் உணவு உபசரிப்புதான்.

அதுவும் நம்ம ஊரில் எல்லாம் அவரவர் வசதிக்கு ஏற்றார் போல் திருமண விருந்து வேற லெவலில் இருக்கும்.

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்.. ரூ.221 கோடியை செலவு செய்த பாஜக.. மஹுவா மொய்த்ரா எம்பி பகீர் தகவல் உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்.. ரூ.221 கோடியை செலவு செய்த பாஜக.. மஹுவா மொய்த்ரா எம்பி பகீர் தகவல்

திருமண சாப்பாடு

திருமண சாப்பாடு

சிக்கான், மட்டன் என வரவேற்பு நிகழ்ச்சிகளில் போடப்படும் உணவுகள் பல காலத்திற்கு பேர் சொல்லும் வகையில் இருக்க வேண்டும் என்று மண வீட்டார் சிறப்பு கவனம் செலுத்தி விருந்து வைப்பர். இதை வயிறார சாப்பிட்டு மொய் வைத்துவிட்டு செல்வதுதான் காலம் காலமாக இந்தியா போன்ற நாடுகளில் கடைபிடிக்கும் நடைமுறையாக உள்ளது. ஆனால் திருமண வீட்டிற்கு வரும் உறவினர்கள் ஆதார் கார்டு காட்டினால் மட்டுமே விருந்தில் பங்கேற்க முடியும் என்று கட்டுப்பாடு போட்டால் என்ன ஆகும்.

 வேற லெவலில் டின்னர்

வேற லெவலில் டின்னர்

வரும் உறவினர்களை வெறுப்பேற்றி விடாதா.. ஆனால் இப்படி ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தின் அம்ரோ மாவட்டத்தில் நடந்த திருமணத்தில் தான் இந்த வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. அம்ரோ மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் பகுதியில் தான் இந்த திருமணம் நடைபெற்றதாம். சற்று வசதி படைத்தவரின் திருமணம் என்பதால், இரவு டின்னரை வேற லெவலில் தயார் செய்து வைத்து இருந்தனர்.

 ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே சாப்பிட அனுமதி

ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே சாப்பிட அனுமதி

திருமண வீட்டிற்கு வந்தவர்களும் மணமக்களை வாழ்த்திவிட்டு சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிடலாம் என்று சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் அந்த கல்யாண வீட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. கூட்டத்தை கண்டு அதிர்ந்த மண வீட்டார், வரும் விருந்தினர்களை ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே சாப்பிட அனுமதி உண்டு என்று கூறியுள்ளனர். இதனால், விருந்தினர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். திருமண வீட்டிற்கு வந்தவர்களும் மணமக்களை வாழ்த்திவிட்டு சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிடலாம் என்று சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் அந்த கல்யாண வீட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. கூட்டத்தை கண்டு அதிர்ந்த மண வீட்டார், வரும் விருந்தினர்களை ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே சாப்பிட அனுமதி உண்டு என்று கூறியுள்ளனர். இதனால், விருந்தினர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விருந்தினர்கள் அதிருப்தி

விருந்தினர்கள் அதிருப்தி

அன்னிய நபர்கள் பலரும் கல்யாண வீட்டை நோக்கி படையெடுத்ததால், சாப்பாடு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என அஞ்சியதாகவும், இதனால், உறவினர்களுக்கு மட்டுமே விருந்து கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் ஆதார் கார்டை வாங்கி பரிசோதித்து அனுப்பியதாக மணமக்கள் வீட்டினர் சொல்கிறார்கள். இருந்தாலும் ஆதார் கார்டு கேட்கப்பட்டதால் திருமணத்திற்கு வந்திருந்த பல உறவினர்கள் கடும் அதிருப்தியோடு சாப்பிடாமல் வெளியேறிவிட்டனர்.

கொஞ்சம் ஓவர் தான்

கொஞ்சம் ஓவர் தான்

தங்களை அவமதிப்பது போல இருப்பதாகவும் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். இப்படி திருமணத்திற்கு வந்த ஒரு சில விருந்தினர்கள் இந்த சம்பவங்களை வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. எங்கும் எதற்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டு விட்டது என்னமோ உண்மைதான்... ஆனால் அதற்காக கல்யாண வீட்டில் விருந்து சாப்பிட ஆதார் கார்டு கேட்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.. என விருந்தினர்கள் பலரும் முனுமுனுத்தபடி உணவை அருந்தியிருக்கின்றனர்.

English summary
Many wedding guests were disgruntled after an unruly crowd turned up at a wedding reception in Uttar Pradesh state, refusing to serve food to those without Aadhaar cards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X