வாக்குகளுக்காக இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள்.. நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்து.. பிரதமர் மோடி பேச்சு!
லக்னோ: தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களால் நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்து என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 2020ல் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் என்பது சித்ரகூட் மாவட்டத்தில் இருந்து எட்டாவா மாவட்டத்தை இணைக்கும். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சுமார் ரூ. 14,850 கோடி செலவில் 296 கிலோ மீட்டர் நீளத்தில் இந்த எக்ஸ்பிரஸ் வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

புதிய சாலை
சித்ரகூட்டில் உள்ள கோண்டா கிராமத்தில் உள்ள இந்த சாலையானது, பண்டா, மஹோபா, ஹமிர்பூர், ஜலான், ஆரையா மற்றும் எட்டாவா உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. அதன்பின், ஆக்ரா - லக்னோ விரைவு சாலையுடன் இணைகிறது.
இந்த புதிய சாலையை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஜாலன் நகரில் நடந்த விழாவில் ரிமோட் பட்டனை அழுத்தி பிரதமர் நரேந்திர மோடி புதிய சாலையை திறந்து வைத்தார். விழாவில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பேச்சு
இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், மாநிலத்தில் இரு விசயங்கள் சரி செய்யப்பட்டால், பின் அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராட முடியும். சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் இணைப்பு ஆகிய இரண்டும் பாஜக ஆட்சியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், நகரங்களின் இணைப்பும் செய்யப்பட்டுள்ளது.
இந்த விரைவு சாலை மூலம் மாநிலத்தில் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதும் உறுதி செய்யப்படும். இந்த விரைவு சாலையால், இந்த பகுதியில் தொழில் வளர்ச்சி அபரிமித அளவில் இருக்கும். இதுவே மோடி மற்றும் யோகியின் அரசு.

இலவசங்களால் ஆபத்து
அதேபோல் ஓட்டுகளை பெறுவதற்காக இலவச பொருட்களை அரசியல் கட்சிகள் வழங்குகிறது. நாட்டின் அரசியலில் இருந்து அவை நீக்கப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த இலவச கலாச்சாரம் மிகவும் ஆபத்து நிறைந்தது. இந்த கலாசாரத்துடன் இணைந்திருப்பவர்கள் சாலைகளை, விமான நிலையங்களை, பாதுகாப்பு உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்ற மாட்டார்கள்.

இலவசங்களுக்கு எதிர்ப்பு
இலவசங்கள் வழங்க வேண்டும் என்ற எண்ணங்களை வீழ்த்த வேண்டும். அரசியல் கட்சிகள் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இலவச பொருட்கள் வழங்குவதாக அறிவிக்கக்கின்றனர். இதற்கு எதிராக மக்களும், இளைஞர்கள் நிற்க வேண்டும். நாட்டில் இலவசங்கள் வழங்கப்படுவதால் மக்களின் எதிர்காலம் இருளுக்குள் தள்ளப்படுகிறது. ஆனால் பாஜக தலைமையில் இந்தியா பல்வேறு சாதனைகளை எட்டுவதோடு, புதிய உயரங்களை எட்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications