லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உ.பி. முதல்கட்ட தேர்தலில் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா.. ஹேப்பியாகும் யோகி ஆதித்யநாத்

Google Oneindia Tamil News

லக்னோ: ‛‛உத்தர பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தலில் அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளது. மக்கள் பாஜகவுக்கு ஓட்டளித்து இருப்பதை இது காட்டுகிறது''என அம்மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான இங்கு 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பிப்.,10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன.

வாகன சோதனையில் வசமாய் சிக்கிய பாஜக செயலாளர்..குட்கா கடத்தல்காரராம்.. திருச்சியில் கம்பியை கவுண்டிங் வாகன சோதனையில் வசமாய் சிக்கிய பாஜக செயலாளர்..குட்கா கடத்தல்காரராம்.. திருச்சியில் கம்பியை கவுண்டிங்

நான்குமுனை போட்டி

நான்குமுனை போட்டி

இதனால் நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் இழந்த ஆட்சியை கைப்பற்ற அகிலேஷ்யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரசும் மாநிலத்தில் செல்வாக்கை நிரூபிக்க முயற்சித்து வருகிறது.

முதல்கட்ட ஓட்டுப்பதிவு

முதல்கட்ட ஓட்டுப்பதிவு

நேற்று முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. ஷாமிலி, ஹாபூர், கவுதம் புத் நகர், முஸாபர்நகர், மீரட், பாக்பாட், காசியாபாத், புலன்ட்சார், அலிகர், மதுரா, ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் மக்கள் ஓட்டளித்தனர். மொத்தம் 60 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

 பாஜகவிற்கு லாபம்

பாஜகவிற்கு லாபம்

இந்நிலையில் 2ம் கட்ட தேர்தலையொட்டி சந்தாசி பகுதியில் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: முதற்கட்ட தேர்தலில் அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளது. மக்கள் பாஜகவுக்கு ஓட்டளித்து இருப்பதை இது காட்டுகிறது. மக்கள் எங்கள் கோரிக்கையை ஏற்று பெருமளவிற்கு திரண்டு வந்து ஓட்டுப் போட்டுள்ளனர். பாஜகவிற்கு ஆதரவாக அலை வீசியதை இது காண்பிக்கிறது.

குற்றங்கள் இல்லை

குற்றங்கள் இல்லை

இரட்டை இன்ஜின் வேகத்தில் செயல்படும் பாஜக அரசு, பெண்கள், வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கியதே இதற்கு காரணம். மாநிலத்தில் கலவரம், குற்றங்கள் நடக்கவில்லை. கலவரம், குற்றத்தில் ஈடுபடுவோர் வீடுகளில் முடங்கியுள்ளனர். மார்ச் 11ல் இவர்களுக்கான கவுண்ட்டவுன் துவங்கும் என்பதால் அச்சப்பட்டுள்ளனர்'' என்றார்.

English summary
Large turnout in 1st phase shows people cast votes for bjp, says UP cm Yogi Adityanath
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X