டிஜிட்டலில் உ.பி மக்களைச் சந்திக்கும் பிரதமர் மோடி..நாளை மறுநாள் முதல் பிரச்சாரம்.. தயாராகிறது பாஜக
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பேரணி பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் திரையில் தோன்றி பொது மக்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளதாக பாஜகவினர் கூறியுள்ளனர்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய வட மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவை தவிர மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களும் தேர்தல்களை எதிர்கொள்ளப் போகின்றன.
உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம். இதற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.

உத்தரபிரதேச தேர்தல்
தற்போது உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் ஜுரம் தொற்றிக் கொண்டுள்ளது. பிரச்சாரங்கள், வேட்பாளர் தேர்வு என மும்முரம் காட்டி வருகின்றனர்.

கட்சிகள் பலப்பரிட்சை
2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. யோகி ஆதித்யநாத் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு மீண்டும் களம் கண்கிறார் யோகி.தற்போது ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் , இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது.

பிரதமர் மோடி
இந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக உபியில் பேரணி, பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் டிஜிட்டல் திரைகள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி முதற்கட்டமாக உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜனவரி 31-ம் தேதி வரை தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் பேரணிகள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் மோடி, உத்தர பிரதேசத்தில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்ட வாக்காளர்களிடம் காணொலி காட்சி மூலம் நடைபெறும் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை நாளை மறுநாள் தொடங்கவுள்ளார்.

டிஜிட்டல் பிரச்சாரம்
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறிய கருத்துக்களின் படி, நாளை மறுநாளுடன் பேரணி, பிரசாரத்திற்கு தடை காலம் உள்ளதாகவும், ஒருவேளை இந்த தடை நீடிக்கப்பட்டால் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் கூறியுள்ளனர். மேற்கு உத்தரபிரதேசத்தின் ஐந்து மாவட்டங்கள் உட்பட சுமார் 21 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்வார் எனவும், மேற்கண்ட மாவட்டங்களில் காணொலி காட்சி மூலம் நடக்கும் பிரசாரத்திற்காக டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு இடத்திலும் சுமார் 500 பேரை அமரவைத்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெரிவித்தனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு அனைத்து சமூக ஊடக தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications