என்னை தடுத்த காவல்துறை.. பெண் பலாத்காரம் செய்யப்பட்டபோது எங்கே..உபியில் வெளுத்து வாங்கிய பிரியங்கா
லக்னோ : ஹத்ராஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தை நாங்கள் சந்திக்க விடாமல் தடுக்க முழு போலீஸ் படையும் இருந்த நிலையில் , அப்பெண் கற்பழிக்கப்படும்போது எங்கே இருந்தார்கள்? என உத்திரபிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏற்கனவே 2 கட்ட வாக்குப் பதிவு உபியில் முடிவடைந்துள்ளது.
முதல் கட்டமாக கடந்த 10-ந் தேதி 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14ஆம் தேதி 2ஆம் கட்ட வாக்குப் பதிவு சஹாரான்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

உத்திர பிரதேச தேர்தல்
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 3வது கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது கசன்கஞ்ச், இடா, ஹத்ராஸ், பிரோசாபாத், மணிப்பூரி, பரூக்பாத், கணுஞ், எட்டுவா, ஹவ்ரிவா, கான்பூர் தெகத், ஹம்பூரிபூர், ஜலுன், மகோபா, ஜான்சி, லலித்பூர், கான்பூர்நகர் ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறு நிலையில், அந்த பகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிரைவடைந்தது.

தீவிர பிரச்சாரம்
அடுத்ததாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள அறையில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் பொதுச் செயலாளரும் உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காங்கிரசின் பாரம்பரியமிக்க தொகுதியாக கருதப்படும் ரேபரலி தொகுதியில் பிரியங்கா காந்தி இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரியங்கா காந்தி
பிரச்சாரத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே பேசிய பிரியங்கா காந்தி, " ஹத்ராஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தை நாங்கள் சந்திக்க விடாமல் தடுக்க முழு போலீஸ் படையும் இருந்தது. அப்பெண் கற்பழிக்கப்படும்போது அவர்கள் எங்கே இருந்தார்கள்? என கேள்வி எழுப்பினார். மேலும் போலீசார் மற்றும் அரசிடம் இருந்து தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக ரோந்து வருவதாகவும் குடும்பத்தினர் எங்களிடம் தெரிவித்ததாகவும் பிரியங்கா கடுமையாக விமர்சித்தார்.

பெண்களுக்கு வாய்ப்பு
காங்கிரஸின் 19,000 தொண்டர்கள் கடந்த 1.5 ஆண்டுகளில் பொதுமக்களுக்களாகிய உங்களுக்காக சிறை சென்றார்கள் என்ற பிரியங்கா காந்தி, சத்தீஸ்கரில் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வது போல் காங்கிரஸ், மின் கட்டணத்தில் பாதியைத் தள்ளுபடி செய்யும் எனவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் எனறார். தேர்தலில் 40% பெண்களுக்கு நாங்கள் போட்டியிட வாய்ப்பு கொடுத்தோம், வெற்றி தோல்வி இருந்தாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் பெண்கள் போராடுகிறார்கள் என்றும் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி வத்ரா கூறினார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications