உபியில் மணல் மாபியா கும்பல் அராஜகம்: சுங்கச்சாவடி தடுப்புகளை உடைத்துக்கொண்டு பாய்ந்த 13 டிராக்டர்கள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் மணல் கடத்திக்கொண்டு வந்த 13 டிராக்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக சுங்கச்சாவடியில் உள்ள தடுப்புகளை உடைத்துக்கொண்டு பாய்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

உத்தர பிரதேசம் - ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் மாஃபியாக்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறப்பதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக அங்குள்ள சம்பல் பகுதியில் மணல் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இயற்கை ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர்.

13 டிராக்டர்கள் கடத்தல் மணலுடன்

13 டிராக்டர்கள் கடத்தல் மணலுடன்

இத்தகைய சூழலில், உத்தர பிரதேசத்தின் ஆக்ரா அருகே மணல் ஏற்றியபடி வந்த டிராக்டர்கள் அங்குள்ள சுங்கச்சாவடியில் நிற்காமல் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒன்று, இரண்டல்ல மொத்தம் இப்படி 13 டிராக்டர்கள் கடத்தல் மணலுடன் ஒன்றன் பின் ஒன்றாக வாகன அணிவகுப்பு போல வரிசையாய் மின்னல் வேகத்தில் சென்றது வாகன ஓட்டிகளை மிரளச்செய்தது.

தடுப்பை இடித்து தள்ளியபடி

தடுப்பை இடித்து தள்ளியபடி

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் வேகமாக பரவி வருகின்றன. அந்த வீடியோவில், இரவு நேரத்தில் வேகமாக வந்து கொண்டிருக்கும் டிராக்டர் சுங்கச்சாவடியை நெருங்கி வருகிறது. சுங்க சாவடியில் கட்டணம் செலுத்தப்பட்டால் மட்டுமே திறந்து விடும் வகையில் தானியங்கி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கும். கடத்திய மணலுடன் வேகமாக வரும் டிராக்டர் சுங்கச்சாவடியில் நிற்கும் என்று அங்கிருந்தவர்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் எதிர்பார்த்த நிலையில், டிராக்டரை ஓட்டிச்செல்பவர் நிற்காமல் தடுப்பை இடித்து தள்ளியபடி சென்றார்.

அடுத்தடுத்து 12 டிராக்டர்கள்

அடுத்தடுத்து 12 டிராக்டர்கள்

அதன்பின் வரிசையாக இப்படி 12 டிராக்டர்கள் நொடிப்பொழுதில் கடந்து சென்றன. டிராக்டரை தடுத்து நிறுத்துவதற்காக சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலர் நீள கம்பு ஒன்று வைத்து டிராக்டர் டிரைவர்களை தாக்க முயல்கிறனர். எனினும் அசராத டிராக்டர் டிரைவர்கள் வேகமாக நிற்காமல் செல்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக புல்லட் ஸ்பீடில் செல்வது போல் டிராக்டர்கள் செல்கின்றன.

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில்

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில்

சுங்கச்சாவடி ஊழியர்களும் கம்பால் ஒவ்வொரு டிராக்டர்களையும் நீள கம்பை வைத்து அடிக்க முயல்கின்றனர். எனினும் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. 13 டிராக்டர்களும் அந்த சுங்கச்சாவடி தடுப்புகளை கடந்து சென்றுவிட்டன. வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சுங்கச்சாவடியில் நிற்காமல் கடத்தல் மணலுடன் டிராக்டர் செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உத்தர பிரதேச போலீசாருக்கு கடும் தலைவலியை இவ்விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

குவாலியரில் இருந்து திரும்பி வந்த இந்த டிராக்டர்கள் ஆக்ரோ நோக்கி சென்றது. ஆக்ரா- குவாலியர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜஜுவா சுங்கச்சாவடியில் தான் மணல் மாஃபியா கும்பலின் இந்த அராஜக செயல் நடைபெற்றுள்ளது. இவ்விவகாரம் தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் விசாரணையை முடுக்கி விட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+