லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வயநாடு மக்களே.. ராகுலை நம்பாதீங்க.. அமேதியை ஏமாத்திட்டு வர்றாரு.. ஸ்மிருதி

Google Oneindia Tamil News

லக்னோ: 15 ஆண்டுகளாக வாக்களித்து எம்பியாக தேர்வு செய்த அமேதி மக்களை ஏமாற்றிவிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது வயநாடு சென்று போட்டியிடுவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதி தான் அமேதி.

இங்கு தான் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் ஆண்டாண்டு காலமாக போட்டியடுகிறார்கள். கடந்த 2004ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக ராகுல் காந்தி அமேதியில் தான் போட்டியிட்டு மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராகுல் வயநாடு

ராகுல் வயநாடு

இந்த முறை கேரள காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று, அமேதி தொகுதியுடன், கேரளாவில் உள்ளவயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இன்று கேரளா சென்ற ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

உலக வங்கியில் ரூ 4 லட்சம் கோடி கடன்.. கையில் 1.76 லட்சம் கோடி ரொக்கம்.. ஷாக் சுயேச்சை! உலக வங்கியில் ரூ 4 லட்சம் கோடி கடன்.. கையில் 1.76 லட்சம் கோடி ரொக்கம்.. ஷாக் சுயேச்சை!

ஸ்மிருதி போட்டி

ஸ்மிருதி போட்டி

இதனிடையே அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்த பாஜக சார்பில் ஸ்மிருதி இராணி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த முறை எதிர்த்து போட்டியிட்ட இராணி பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். எனினும் இந்த முறை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். இதற்காக மத்திய அரசின் திட்டங்களை சொல்லி வாக்கு கேட்டு வருகிறார்.

உங்களுக்கு அரசியல் தெரியுமா? அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க.. பாஸ் பண்ணிட்டா கெத்துதான்!

ராகுல் மீது தாக்குதல்

ராகுல் மீது தாக்குதல்

இந்யிலையில் ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் செண்ட மேள வரவேற்போடு கேரளாவில் சுற்றும் நிலையில், ஸ்மிருதி இராணி இதுதான் வாய்ப்பு என அங்கு இரண்டு நாள் பயணமாக தீவிரபிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவர் இன்று அமேதி மக்களிடம் பேசுகையில், இந்தா பாருங்க மக்களே! 15 வருடங்களாக இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக சென்ற ராகுல் காந்தி. இப்போது வேறு தொகுதியில் போட்டியிடுதன் மூலம் உங்களை (அமேதி மக்களை) அவமதித்துவிட்டார். இதை எப்போதும் மறக்க முடியாது.

ஸ்மிருதி எச்சரிக்கை

ஸ்மிருதி எச்சரிக்கை

வயநாடு மக்களே உங்களை எச்சரிக்கிறேன். ராகுல் காந்தி எம்பியாக இருக்க லாயக்கானவரா என்பதை அமேதிக்கு வந்து பாருங்க. இங்க என்ன செய்தாருன்ணு தெரியும். 15 வருஷமா அமேதி மக்களால் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், இப்போது உங்களை ஏமாற்ற வருகிறார். எனவே வயநாடு மக்களே எச்சரிக்கையாக இருங்கள்" இவ்வாறு கூறினார்.

English summary
Smriti Irani says, I want to warn Wayanad. If you want to see Rahul Gandhi's capabilities as an MP, come and see Amethi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X