உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பா.ஜக அமோக வெற்றி.. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு பின்னடைவு!
லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது. உத்தர பிரதேசத்தில் 75 இடங்களுக்கு ஜில பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் நடந்தது.
இதில் பா.ஜ.க 67 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வெறும் 5 இடங்களை மட்டுமே பெற்றது. ராஷ்ட்ரிய லோக் தளம், ஜான்சத்த தளம் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் தலா ஒரு இடத்தை வென்றனர்.

2016-ல் நடந்த ஜில பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 60 இடங்களைப் பிடித்து இருந்தது. இந்த முறை அந்த கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வெற்றி பாஜகவுக்கு தெம்பை கொடுத்துள்ளது.
ஆனாலும் உள்ளாட்சி தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. இதை வைத்து சட்டமன்ற தேர்தலை கணிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் கருத்து கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications