இந்தியாவின் சக்தி வளர்ந்து வருவதால்தான் உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க முடிகிறது: மோடி பிரச்சாரம்
லக்னோ: ‛‛இந்தியாவின் சக்தி வளர்ந்து வருவதால் தான் போருக்கு மத்தியில் உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க முடிகிறது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிப்ரவரி 10, 14, 20, 23, 27 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. 6ம் கட்ட தேர்தல் நாளை நடக்கிறது.
அதன்பிறகு 7வது மற்றும் கடைசிகட்ட தேர்தல் மார்ச் 7 ல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நான்கு முனை போட்டி
இந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சிக்கிறது. எதிர்க்கட்சிகளாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மம்தாவின் பகுஜன் சமாஜ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகின்றன. பாஜகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோடி பேச்சு
இந்நிலையில் இன்று உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் செய்தார்.அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்தியாவின் சக்தி வளர்ந்து வருகிறது. இதனால் தான் உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மத்திய அரசால் மீட்க முடிந்தது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் முயற்சியை ஒருபோதும் மத்திய அரசு கைவிடாது. இந்திய ராணுவத்தின் வீரம், மேக் இன் இந்தியா திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பும் நபர்களால் இந்தியாவை வலிமையாக்க முடியாது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

எதிர்க்கட்சிகளுக்கு பதில்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்பதில் இந்தியா தாமதமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி உத்தர பிரதேச பொதுக்கூட்டத்தில் பேசி உள்ளார். முன்னதாக உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பது தொடர்பாக கடந்த மூன்று நாட்களில் நான்கு முறை உயர்மட்ட குழுவை கூட்டி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

மீட்பு பணி விரைவு
உக்ரைனில் தொடர்ச்சியாக நிலைமை மோசமாகி வருவதால் ‛ஆபரேஷன் கங்கா' எனும் இந்தியாவின் மீட்பு நடவடிக்கையும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.மீட்பு பணியில் தனியார் விமானங்களுடன் இந்திய விமானப்படை விமானங்களும் இணைந்துள்ளன. அத்துடன் மீட்பு நடவடிக்கைக்கான ஒருங்கிணைப்பு பணியை மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கிரன் ரிஜூ, விகே சிங் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications