லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

80 Vs 20..! இவ்வளவுதான் உத்தரப்பிரதேச தேர்தல்.. சிம்பிளாக 'விளக்கிய' யோகி ஆதித்யநாத்

By
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 80 சதவிகித மக்களுக்கும் 20 சதவிகித மக்களுக்கும் நடக்கும் போட்டிதான் இந்த தேர்தல் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத் தேர்தலை அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர். முதற்கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று காலை முதல் 2ம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. பாஜக சார்பாக நாடு முழுவதும் இருக்கும் நட்சத்திரப் பேச்சாளர்கள் இந்த பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.

பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடப்பது 80 சதவிகிதம் வளர்ச்சியை ஆதரிக்கும் மக்கள், அவர்கள் அரசின் திட்டங்களை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். மற்றொரு 20 சதவிகிதம் அரசு எது செய்தாலும் அதை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து அதை விமர்சிக்கும் மக்களுக்கும் நடக்கும் போட்டி தான் இந்த தேர்தல் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தேர்தல்

தேர்தல்

உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி குறித்து யோகி கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவருமே காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கப் போதும். வேறும் யாரும் தேவையில்லை. இந்த கட்சி விரைவில் காணாமல் போகும் என தெரிவித்துள்ளார்.

பாஜக‌

பாஜக‌

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று, வரலாற்று சாதனைப் படைக்கும். 300 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். கடந்த தேர்தலை விடவும் இந்த முறை அதிக வெற்றிகளைப் பெறுவோம். பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்றுவோம். இந்ததேர்தலில் பாஜகவவை மக்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவார்கள்' என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

 உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று, வரலாற்று சாதனைப் படைக்கும். 300 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். கடந்த தேர்தலை விடவும் இந்த முறை அதிக வெற்றிகளைப் பெறுவோம். பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்றுவோம். இந்த தேர்தலில் பாஜகவவை மக்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவார்கள்' என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

English summary
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath said that the elections are a fight between 80 versus 20, wherein 80 per cent are those who back progress while 20 per cent people oppose everything and have a negative attitude.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X