லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் - உத்தரப்பிரதேச மக்களிடம் மாயாவதி கோரிக்கை!

By
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை முதற்கட்ட தேர்தல் நடந்துவரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாய்ப்பு தாருங்கள் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த அரசின் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் 4 ஆயிரத்துக்குள் கொரோனா பாதிப்பு வந்தது.. ஆறுதல் தரும் அரசின் அறிக்கை.. முழு விவரங்கள் தமிழகத்தில் 4 ஆயிரத்துக்குள் கொரோனா பாதிப்பு வந்தது.. ஆறுதல் தரும் அரசின் அறிக்கை.. முழு விவரங்கள்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என நான்கு பெரிய கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்து வருகின்றன. உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

மாயாவதி

மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, முதற்கட்ட தேர்தல் நடந்துவரும் நிலையில் டிவிட்டரில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், '' மேற்கு உ.பி.யில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வரவிருக்கும் ஐந்தாண்டுகள் முன்பு போல் உங்களுக்கு துக்கமும், ஆதரவற்ற நிலையும் நிறைந்ததாக இருக்குமா அல்லது உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது.

பகுஜன் சமாஜ்

பகுஜன் சமாஜ்

பகுஜன் சமாஜ் கட்சி சமூக மாற்றம் மற்றும் பொருளாதார விடுதலைக்காக தொடர்ந்து இயங்கிவரும் கட்சி. எங்கள் குறிக்கோள் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் பிற உழைக்கும் சமுதாயத்தை ஆதரவற்ற மற்றும் அடிமை வாழ்க்கையிலிருந்து விடுவித்து, அவர்களை அதிகாரத்தில் சரியான பங்காளிகளாக மாற்றுவதுதான். இதற்கு பாஜக போன்ற கட்சிகள் தடையாக உள்ளன. சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பரவாயில்லை.

 வாய்ப்பு

வாய்ப்பு

உத்தரபிரதேசத்தில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், குண்டும் குழியுமான சாலைகள், மின்சாரம், சுகாதாரம் போன்றவை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளன. ஆனால் இதுகுறித்து பாஜக எந்த கவலையும் தெரிவிக்கவில்லை. பாஜக பிரச்சனைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது. இந்த அரசை மாற்றி அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. அது மக்கள் கையில் தான் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்'' என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 தேர்தல்

தேர்தல்

உத்தரப்பிரதேச தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி இல்லாமல் போட்டி இடுகிறது. ஆட்சியில் இருந்த கட்சி இன்று அடையாளம் தெரியாமல் போய்கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், மாயாவதி தாங்கள் மீண்டும் வருவதாக, அக்கட்சித் தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

அப்ஹா சௌத்ரிஉத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவு நடக்கிறது. 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் 620க்கும் அதிமானோர் முதற்கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என நான்கு முனை போட்டி நடக்கிறது. நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 58 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள்:

வ.எண் தொகுதி வேட்பாளர் பெயர்
சமாஜ்வாதி பாஜக காங்கிரஸ் பகுஜன் சமாஜ்
1 கைரானா நஹித் ஹசன் மிரிகங்கா சிங் ஹாஜி அக்லாக் ராஜேந்திர சிங் உபாத்யாய்
2 தானா பவன் அஷ்ரப் அலி சுரேஷ் ராணா சத்யா சய்யம் சைனி ஜாகீர் மாலிக்
3 ஷாம்லி பிரசன்ன சவுத்ரி தேஜேந்திர சிங் நிர்வால் முகமது அயூப் ஜங் பிரிஜேந்திர மாலிக்
4 புதானா ராஜ்பால் பலியன் உமேஷ் மாலிக் தேவேந்திர காஷ்யப் ஹாஜி முகமது அனிஷ்
5 சார்தவால் பங்கஜ் கே.ஆர். மாலிக் சப்னா காஷ்யப் டாக்டர். யாஸ்மீன் ராணா சல்மான் சயீத்
6 புர்காசி (ரிசர்வ்) அனில் குமார் பிரமோத் உத்வால் தீபக் குமார் சுரேந்திர பால் சிங்
7 முஸாப்பர்நகர் சௌரப் கபில் தேவ் அகர்வால் சுபோத் சர்மா புஷ்பங்கர் பால்
8 கத்தவ்லி ராஜ்பால் சிங் சைனி விக்ரம் சைனி கௌரவ் பதி கர்தார் சிங் பதனா
9 மீராப்பூர் சந்தன் சவுகான் பிரசாந்த் குர்ஜார் மௌலானா ஜமீல் க்காஸ்மி முகமது சலீம்
10 சிவல்கஸ் குலாம் முகமது மனேந்திர பால் சிங் ஜகதீஷ் சர்மா நன்ஹே கான்
11 ஷ‌ர்தனா அதுல் சங்கீத் சோம் சையத் ரியானுதீன் சஞ்சீவ் குமார் தாமா
12 ஹஸ்தினாபூர் (ரிசர்வ்) யோகேஷ் வெர்மா தினேஷ் கதிக் அர்ச்சனா கவுதம் சஞ்சீவ் கே.ஆர். ஜாதவ்
13 கித்தோர் ஷாஹித் மஞ்சூர் சத்யவீர் தியாகி பபிதா குர்ஜர் குஷால் பால் மாவி
14 மீரட் கண்ட் மனிஷா அஹ்லாவத் அமித் அகர்வால் அவனிஷ் கஜாலா அமித் சர்மா
15 மீரட் ரஃபிக் அன்சாரி கமல் தத் சர்மா ரஞ்சன் சர்மா முகமது தில்ஷத்
16 மீரட் தெற்கு முகமது அடில் சோமேந்திர டோமர் நஃபீஸ் சைஃபி குன்வர் தில்ஷத் அலி
17 சப்ரவ்வுளி அஜய் குமார் சஹேந்திர சிங் ரம்லா டாக்டர் யூனுஸ் சவுத்ரி ...
18 பரெள‌த் ஜெய்வீர் சிங் டோமர் கிருஷ்ணபால் சிங் மாலிக் ராகுல் காஷ்யப் அங்கித் சர்மா
19 பாக்பத் அஹ்மத் ஹமீத் யோகேஷ் தாமா அனில் தேவ் தியாகி அருண் கசானா
20 லோனி மதன் பையா நந்த்கிஷோர் குர்ஜர் யாமீன் மாலிக் ஹாஜி ஆகில் சவுத்ரி
21 முராத்நகர் சுரேந்திர குமார் அஜித் பால் தியாகி பிஜேந்திர யாதவ் ஹாஜி அய்யூப் இத்ரிஷி
22 ஷாஹிபாபாத் அமர்பால் சுனில் சர்மா சங்கீதா தியாகி அஜீத் கே.ஆர். பால்
23 காஸியாபாத் விஷால் வெர்மா அதுல் கார்க் சூஷன் கோயல் கிருஷ்ண குமார் சுக்லா
24 மோடி நகர் சுதேஷ் சர்மா மஞ்சு சிவாச் நீரஜ் குமாரி டாக்டர் பூனம் கர்க்
25 தௌலானா அஸ்லாம் அலி தர்மேஷ் டோமர் அரவிந்த் சர்மா வாசித் பிரதான்
26 ஹபூர் (ரிசர்வ்) கஜ்ராஜ் சிங் விஜய் பால் ஆட்தி பாவனா வால்மீகி மனிஷ் கே.ஆர். மோனு
27 கர்முக்டேஷ்வர் ரவீந்திர சவுத்ரி ஹரேந்திர சவுத்ரி அப்ஹா சௌத்ரி மதன் சௌஹான்
28 நொய்டா சுனில் சவுத்ரி பங்கஜ் சிங் பன்குரி பதக் கிரிபரம் சர்மா
29 தாத்ரி ராஜ்குமார் தேஜ்பால் சிங் நகர் தீபக் பாதி சோட்டிவாலா மன்வீர் சிங் பாதி
30 ஜேவார் அவ்தார் சிங் பதானா திரேந்திர சிங் மனோஜ் சவுத்ரி நரேந்திர பாதி தாதா
31 சிக்கந்த்ராபாத் ராகுல் யாதவ் லக்ஷ்மிராஜ் சிங் சலீம் அக்தர் சௌத்ரி மன்வீர் சிங்
32 புலந்த்ஷஹர் ஹாஜி யூனுஸ் பிரதீப் சவுத்ரி சுஷில் சவுத்ரி மொபின் கல்லு குரைஷி
33 சைய‌னா தில்நவாஜ் கான் தேவேந்திர சிங் லோதி பூனம் பண்டிட் சுனில் பரத்வாஜ்
34 அனுப்ஷஹர் கே.கே சர்மா சஞ்சய் ஷர்மா சவுத்ரி கஜேந்திரா ராமேஷ்வர் சிங் லோதி
35 தேபாய் ஹரிஷ் குமார் சி பி சிங் சுனிதா சர்மா கரண் பால் சிங்
36 ஷிகர்பூர் கிரண் பால் சிங் அனில் சர்மா ஷியாவுர் ரஹ்மான் முகமது ரஃபிக்
37 குர்ஜா (ரிசர்வ்) பன்ஷி சிங் மீனாட்சி சிங் துக்கி மால் காதிக் வினோத் குமார் ஜாதவ்
38 கைர் (ரிசர்வ்) பகவதி சூர்யவன்ஷி அனூப் பால்மிகி மோனிகா சூர்யவன்ஷி சாருகென் கென்
39 பாரௌலி பிரமோத் கவுர் தாக்கூர் ஜெய்வீர் சிங் கௌரங் தேவ் சவுகான் நரேந்திர ஷர்மா
40 அட்ரெளலி வீரேஷ் யாதவ் சந்தீப் சிங் தர்மேந்திர குமார் டாக்டர் ஓம்வீர் சிங்
41 ச்ச‌ர்ரா லக்ஷ்மி தங்கர் ரவேந்திர பால் சிங் அகிலேஷ் சர்மா திலக் ராஜ் யாதவ்
42 கோயில் ஷாஸ் இஷாக் அனில் பராஷர் விவேக் பன்சால் முகமது பிலால்
43 அலிகர் ஜாபர் ஆலம் முக்தா ராஜா முகமது சல்மான் இம்தியாஸ் ரசியா கான்
44 இக்லஸ் (ரிசர்வ்) பீர்பால் சிங் திவாகர் ராஜ்குமார் சஹ்யோகி ப்ரீத்தி தங்கர் சுஷில் கே.ஆர் ஜாதவ்
45 ச்சட்டா தேஜ்பால் சிங் லக்ஷ்மி நாராயண் பூனம் தேவி சோன்பால் சிங்
46 மன்ட் சஞ்சய் லதர் ராஜேஷ் சவுத்ரி சுமன் சவுத்ரி ஷியாம் சுந்தர் சர்மா
47 கோவர்தன் ப்ரீதம் சிங் மெக்ஷ்யாம் சிங் தீபக் சவுத்ரி ராஜ் குமார் ராவத்
48 மதுரா தேவேந்திர அகர்வால் ஸ்ரீகாந்த் ஷர்மா பிரதீப் மாத்தூர் சதீஷ் கே.ஆர் சர்மா
49 பல்தேவ் (ரிசர்வ்) பபிதா தேவி பூரன் பிரகாஷ் ஜாதவ் வினேஷ் குமார் அசோக் கே.ஆர் சுமன்
50 எத்மட்பூர் டாக்டர் வீரேந்திர சிங் தரம்பால் சிங் ஷிவானி சிங் பாகேல் சர்வேஷ் பாகேல்
51 ஆக்ரா கண்ட். (ரிசர்வ்) குன்வர் சந்த் ஜி.எஸ் தர்மேஷ் சிக்கந்தர் வால்மீகி பர்தேந்து அருண்
52 ஆக்ரா தெற்கு வினய் அகர்வால் யோகேந்திர உபாத்யாயா அனுஜ் சர்மா ரவி பரத்வாஜ்
53 ஆக்ரா வடக்கு ஞானேந்திரா புருஷோத்தம் கந்தேல்வால் வினோத் கே.ஆர். பன்சால் ஷபீர் அப்பாஸ்
54 ஆக்ரா ரூரல் (ரிசர்வ்) மகேஷ் குமார் ஜாதவ் பேபி ராணி மௌரியா உபேந்திர சிங் கிரண் பிரபா கேசரி
55 ஃபதேபூர் சிக்ரி பிரிஜேஷ் சாஹர் சௌத்ரி பாபுலால் ஹேமந்த் சாஹர் டாக்டர் முகேஷ் கே.ஆர் ராஜ்புத்
56 கெரகர்க் ரௌத்தன் சிங் பகவான் குஷ்வாஹா ராம்நாத் ஷிகர்வார் கங்காதர் குஷ்வாஹா
57 ஃபதேஹாபாத் ரூபாலி தீட்சித் சோடேலால் வெர்மா ஹோதம் சிங் நிஷத் சைலேந்திர பிரதாப் சிங்
58 பாஹ் மதுசூதன் ஷர்மா ராணி பக்ஷலிகா மனோஜ் தீட்சித் நிதின் வெர்மா

English summary
BSP leader Mayawati appealed to the citizens to give a chance to Bahujan samaj party form government in Uttar Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X