லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக VS சமாஜ்வாதி: உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள்.. இந்த தேர்தல் நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?

By
Google Oneindia Tamil News

லக்னோ: நடந்து முடிந்துள்ள இந்த ஐந்து மாநில தேர்தல், இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Recommended Video

    UP Election Result | இதுவரை நடந்ததே இல்லை.. பாஜக-வுக்கு வரலாற்று வெற்றியை பெற்று கொடுத்த யோகி ஆதித்யநாத்

    கடந்த முப்பது ஆண்டுகளில், இந்தியாவிலேயே மிக முக்கிய தேர்தலாகப் பார்க்கப்படும் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் அதே கட்சி, மீண்டும் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை.

    நடந்துமுடிந்துள்ள ஐந்து மாநில தேர்தலில் பஞ்சாபில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியைப்

    32% வாக்குகள்.. பாஜக அலையில் காணாமல் போன சமாஜ்வாதி - அதிகரித்த வாக்குகள் ஆனாலும் தோற்ற அகிலேஷ் யாதவ்32% வாக்குகள்.. பாஜக அலையில் காணாமல் போன சமாஜ்வாதி - அதிகரித்த வாக்குகள் ஆனாலும் தோற்ற அகிலேஷ் யாதவ்

    பாஜக‌

    பாஜக‌

    உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்டில் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கிறது. கோவாவில் மட்டும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக. உத்தரகாண்ட் மாநிலம் தவிர மற்ற மூன்று மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமான காற்று வீசுகிறது. உத்தரகாண்டில் மட்டும் 2% எதிர்காற்று வீசுகிறது. ஆனாலும் உத்தரகாண்டில் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கிறது.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, இதற்கு நேர் எதிராக இருக்கிறது. காங்கிரஸ் பக்கம் மக்கள் காத்து கொஞ்சம் கூட இல்லை. ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான சூழல் உள்ளது. ஆனாலும் அங்கும் காங்கிரஸ் தோற்றுள்ளது. உத்தரகாண்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என நினைத்தது. அல்லது பாஜகவுக்கு சமமான போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. உத்தரகாண்டில் 70 இடத்தில் பாஜக 48 இடத்திலும், காங்கிரஸ் கட்சி 18 இடத்திலும் வென்றுள்ளது.

    வாக்கு சதவிகிதம்

    வாக்கு சதவிகிதம்

    உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக இருந்த காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் வாக்கு சதவிகிதம் 18 சதவிகிதத்துக்கும் குறைவாக பதிவாகி இருக்கிறது. இதில் 4 சதவிகித வாக்கு மட்டுமே சமாஜ்வாதி கட்சிக்கு சென்றுள்ளது. 14 சதவிகித வாக்குகள் பாஜகவுக்கு சென்றுள்ளது. ஆனால் சமாஜ்வாதி கட்சியின் வாக்குகள் வேறு கட்சிக்கு செல்லவில்லை.

    எங்கு வெற்றி

    எங்கு வெற்றி

    மேற்கு உத்தரப்பிரதேசம், வடகிழக்கு மாநிலம், டோப், பண்டல்கந்த் பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் தான் உத்தரப்பிரதேசத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற காரணமாக இருந்தது. இந்தப் பகுதிகளில் 12 முதல் 15 சதவிகித வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளது. கஸாகஞ் பகுதியில் கடந்த 12 தேர்தல்களில் ஒரே ஆள் தான் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் மட்டும் பாஜக 52 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

    English summary
    These five state elections are seen as a major turning point in Indian political history. The BJP has a historic record in Uttar Pradesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X