Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊழலை எதிர்த்ததால் 7 முறை துப்பாக்கி சூடுக்கு ஆளானவர்.. தளரவில்லை.. யூபிஎஸ்சி தேர்வில் வென்ற அதிகாரி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் ரூ.83 கோடி மதிப்பிலான ஊழலை கண்டுபிடித்த நேர்மை அதிகாரி மீது 7 முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. இதில் கண்பார்வை, செவித்திறன் குறைபாடு அடைந்த நேர்மை அதிகாரி தற்போது யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் ஹப்பூரில் சமூக நலத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரிங்கு சிங் ராஹி. நேர்மையான அதிகாரியாக பெயர் பெற்றவர்.

இவர் தான் பணி செய்யும் இடங்களில் முறைகேடுகளுக்கு இடம் கொடுப்பது இல்லை. இதனால் இவர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

 ஊழல் கண்டுபிடிப்பு

ஊழல் கண்டுபிடிப்பு

இவர் உத்தர பிரதேச மாநில அரசு தேர்வுத்துறை சார்பில் நடந்த தேர்வில் 2008 ல் தேர்ச்சி அடைந்தார். இதையடுத்து 28 வயதில் அவர் சமூக நலத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2009ம் ஆண்டில் முசாபர் நகரில் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் ஊழல் நடந்தது. ரூ.83 கோடி வரை மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் ஊழல் நடந்ததை பகிரங்கப்படுத்தினார். இதையடுத்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

 7 முறை துப்பாக்கிச்சூடு

7 முறை துப்பாக்கிச்சூடு

மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். 7 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதில் 3 குண்டுகள் அவர் மீது பாய்ந்தன. இதனால் அவர் சுருண்டு கீழே விழுந்தார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் உயிர் பிழைத்தார். இருப்பினும் அவரது கண்பார்வை, செவித்திறன் குறைப்பாட்டுக்கு ஆளானார். இதுதொடர்பாக 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் நான்கு பேருக்கு மட்டுமே 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற நால்வரும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

ஐஏஎஸ் பயிற்சி மையம்

ஐஏஎஸ் பயிற்சி மையம்

இதற்கிடையே ரிங்கு சிங் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார். போதி, சர்வாஸ்தி, லலித்பூர் உள்பட பல மாநிலங்களில் இடங்களில் அவர் பணியமர்த்தப்பட்டார். மேலும் அவர் அரசு நடத்தும் ஐஏஎஸ் பயிற்சி மையத்திலும் பயிற்சி வழங்கி வந்தார். அனைவரிடமும் சகஜமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதால் பயிற்சி பெறுபவர்கள் அவரிடம் நெருங்கி பழகினர்.

 யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி

இந்நிலையில் யுபிஎஸ்சி தேர்வு எழுத பலர் அவரை வலியுறுத்தினர். அதன்படி கடந்த 2021ல் நடந்த யுபிஎஸ்சி தேர்வை அவர் எழுதினார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்திய அளவில் 683வது இடத்தை பிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சக மாணவர்கள் கூறியதால் நான் தேர்வு எழுதினேன். இதில் வெற்றியும் பெற்றுள்ளேன். இந்தியாவில் நேர்மையானவர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், பாதகமான சூழ்நிலை ஏற்படும் போதுதான் நேர்மைக்கான சோதனை வருகிறது " என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+