லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பியில் நாளை முதல்கட்டத் தேர்தல்.. விஐபிகள் மோதும் தொகுதிகள் என்னென்ன? பரபரக்கும் களம்!

By
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதநடைபெறவுள்ளது. முதல்கட்டத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

நாட்டின் முக்கிய தேர்தலாக கருதப்படும் உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்டதேர்தல் 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. முதற்கட்ட தேர்தலில் 623 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக‌ நேற்று மாலை 6 மணியுடன் இந்த மாவட்டங்களில் பிரசாரம் நிறைவடைந்தது.

 உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

அடுத்து நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான செமி பைனலாக உத்தரப்பிரதேச தேர்தலை பார்க்கிறது பாஜக. அதனால் எப்படியாவது மீண்டும் இங்கு வெற்றி பெற பிரசாரம் செய்துவருகிறது. கடந்த முறை ஆட்சியை இழந்த சமாஜ்வாதி இந்த முறை யாரும் எதிர்பார்க்காத பல முயற்சிகளைக் கையிலெடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் நான்குமுனை போட்டி நிலவிகிறது.

முதல் கட்ட தேர்தல்

முதல் கட்ட தேர்தல்

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள 58 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இந்த 11 மாவட்டங்களில், கடந்த சட்டசபைத் தேர்தலில் 58 தொகுதிகளில் 53 தொகுதியை பாஜக கைப்பற்றியது. மேற்கு உத்தரப்பிரதேசம் ஜாட் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இங்கு ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி பெரும்பான்மையாக உள்ளது. இந்தத்தேர்தலில் இவர்கள் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளனர். இந்த முதல் கட்டத் தேர்தலில் பல முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

 ராஜ்நாத் சிங் மகன்

ராஜ்நாத் சிங் மகன்

உத்தரப்பிரதேசத்தின் முக்கிய தொகுதியான நொய்டாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜகவின் சார்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று நொய்டாவில் இருந்து சட்டசபைக்குத் தேர்வானார் பங்கஜ் சிங். சமாஜ்வாதி இந்த முறையும் சுனில் சவுத்ரிக்கே டிக்கட் கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் சார்பாக பங்குரி பதக் போட்டியிடுகிறார். இதற்கு முன் சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். உ.பியில் நாளை முதல்கட்டத் தேர்தல்.. விஐபிகள் மோதும் தொகுதிகள் என்னென்ன? பரபரக்கும் களம்!

கைரானா

கைரானா

கைரானா தொகுதியில் சமாஜ்வாதியின் நாஹித் ஹசனும் பாஜக சார்பாக மிரிகங்கா சிங்கும் போட்டியிடுகிறார்கள். கடந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் ஹசன் பாஜகவைத் தோற்கடித்திருந்தார். இந்த முறை நாஹித் ஹசன் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்திருக்கின்றன. கிரிமினல் வழக்குப் பதியப்பட்டு, ஜனவரி மாதம் காவல்துறை ஹசனைக் கைது செய்தனர். இந்நிலையில் மீண்டும் அவருக்கு சீட் கொடுத்திருக்கிறது சமாஜ்வாதி.

ஆக்ராவில் முன்னாள் ஆளுநர்

ஆக்ராவில் முன்னாள் ஆளுநர்

பேபி ராணி மவுரியா பாஜகவில் இருந்தும், சமாஜ்வாதி கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் மகேஷ் குமாரும் போட்டியிடுகின்றனர். பேபி ராணி ஆக்ராவின் மேயராக செயல்பட்டிருக்கிறார். 2007 தேர்தலில் பகுஜன் சமாஜிடம் தோற்றார். முன்னாள் உத்தரகாண்ட் மாநில ஆளுநராக இருந்த பேபி ராணி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து பாஜகவின் துணைத் தலைவராக ஜே.பி.நட்டாவால் நியமனம் செய்யப்பட்டார். 2017 தேர்தலில் ஆக்ராவில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

கரும்பு மந்திரி

கரும்பு மந்திரி

தானா பவன் தொகுதியில் இரண்டு முறை வென்ற உத்தரப்பிரதேச கரும்பு மற்றும் சர்க்கரை ஆலை துறை அமைச்சர் சுரேஷ் குமார் இந்த முறை மீண்டும் போட்டியிடுகிறார். இந்த முறை உத்தரப்பிரதேசத்தில் கரும்பு விவசாயிகள் தங்களுக்கு கரும்புக்கான நிலுவைத் தொகையைக் கொடுக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டன. சமாஜ்வாதி கட்சி சார்பாக ராஷ்ட்ரிய லோக் தள் அமைப்பின் அஷ்ரப் அலி போட்டியிடுகிறார். கடந்த 2012 தேர்தலில் 265 வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷிடம் தோற்றார் அஷ்ரப்.

முஸாப்பர்நகர்

முஸாப்பர்நகர்

உத்தரப்பிரதேசத்தில் அதிக வன்முறை நிகழ்ந்திருப்பது முஸாப்பர் நகரில் தான், விவசாயப் பிரச்சனைகளுக்காக பாஜகவுக்கு எதிராக விவசாயிகள் குரல் கொடுத்தனர். இந்த முறை சமாஜ்வாதி கூட்டணியை விவசாயிகள் நம்பத்தயாராக இருப்பார்களா என்பதை அறிய அனைத்துக் கட்சிகளும் ஆர்வமாக இருக்கின்றன. இந்த முறை பாஜகவில் கபில் தேவ் அகர்வால் போட்டியிடுகிறார், கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் கபில் தேவ்.

English summary
The first phase of polling in Uttar Pradesh will take place tomorrow. We will get to know the main candidates contesting in the first round of elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X