உ.பியில் சரியான காலத்தில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன! முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு, மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை சரியான காலத்தில் செயல்படுத்தி முடித்திருப்பதாக யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் வெளிப்படைத்தன்மையாக செயல்படுத்தி வருகிறது. சொந்தமாக வீடு இல்லாமல் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு சொந்த வீடுகளை கட்டிக்கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சோன்பத்ரா மாவட்டம் உத்தரப் பிரதேசத்தின் ஆற்றல் மையமாக கருதப்படுகிறது. ஆனால் இம்மக்களுக்கு கடந்த காலங்களில் போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. இது சமாஜ்வாடி ஆட்சியின் அப்பட்டமான தோல்வி. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இம்மாவட்டத்தின் ஒவ்வொரு வீடுகளுக்கும் போதிய மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்திருக்கிறோம். மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில், "ஹர் கர் நல் யோஜனா" திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளோம்.
அதேபோல பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் முதலமைச்சர் ஆவாஸ் யோஜனா மூலம் இதுவரை சோன்பத்ரா மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக மாவட்டத்தை மேம்படுத்த சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள விமான நிலையத்தையும் மேம்படுத்த முயன்று வருகிறோம். இம்மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துள்ளது.
இந்த மருத்துவமனை கல்லூரி திறக்கப்படும்போது, மாவட்டத்திற்கு ஓர் மருத்துவமனை என்கிற கனவு நிஜமாகும். உத்தரப் பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் அனைத்து திட்டங்களும் ராமராஜ்ஜியத்திற்கான அடித்தளம். உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் பாஜக அரசு, மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை சரியான காலத்தில் செயல்படுத்தி முடித்திருக்கிறது" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications