'சூப்பர்' அறிவிப்பு.. கனமழையில் தத்தளிக்கும் உத்தரப்பிரதேசம்.. யோகி போட்ட உத்தரவு.. விவசாயிகள் ஹேப்பி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட கோதுமையை அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் எடுத்துக்கொள்ளும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை அம்மாநில பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏற்கெனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதன் பின்னர் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவை மக்கள் மத்தியில் பாஜக அரசு மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இந்த நம்பிக்கையை வாக்குகளாக மாற்ற பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது.

எனவே இந்த 6 ஆண்டு சாதனையை மக்கள் மத்தியில் பிரசாரமாக கொண்டு சென்று வருகிறது. மேலும், பல புதிய திட்டங்களையும் யோகி அறிவித்து வருகிறார். அதேபோல முடிவுற்ற திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்காக தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. மட்டுமல்லாது பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளையும் மக்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறார். பெண்கள் நலனில் முன்னேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு, மக்கள் குறைகளை கேட்க குறைதீர்வு கூட்டம் ஆகியவற்றை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இதன் தொடர்ச்சியாக நேற்று மழை தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட கோதுமையை அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் எடுத்துக்கொள்ளும் என்று யோகி ஆதித்யநாத் உறுதியளித்திருக்கிறார்.
கனமழை கோதுமை மட்டுமல்லாது பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களையும் பாதித்திருப்பதால் இதனை கொள்முதல் செய்வதிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். புதிய திட்டங்களை அறிவிப்பது, முடிவுற்ற திட்டங்களை மக்களுக்காக தொடக்கி வைப்பது என்பது மட்டுமல்லாது மழை, வெள்ளம் போன்ற விஷயங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக யோகி அரசு கவனம் செலுத்தியிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஏற்கெனவு நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்து சரியான முறையில் ஆய்வு நடத்தப்பட வேண்டும். இழப்பீடு மதிப்பீடு நியாயமானதாக இருக்க வேண்டும். அதேபோல நிவாரண ஆணையர் அலுவலக விதிகளின்படி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications