வளர்ச்சிக்கு தடையாக இருந்த குடும்ப அரசியலை ஒழித்தது பாஜகதான்! முதல்வர் யோகி அதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வாரிசு அரசியலை ஒழித்தது பாஜகதான் என்று முதலமைச்சர் யோகி அதித்யநாத் கூறியுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் இருந்ததை விட தற்போது உத்தரப் பிரதேசம் வளர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் குடும்ப அரசியல் குறித்து பேசிய அவர், "கடந்த கால ஆட்சியில் குடும்ப அரசியலின் தலையீடு அதிகமாக இருந்தது. எனவே வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி பெரும்பாலும் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கடந்த 2017ம் ஆண்டுக்கு முன்னர் மாநிலத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. குடிநீரை எடுக்க மக்கள் பல கீ.மீ வரை நடந்து செல்ல வேண்டிய அவசியம் இருந்தது.
ஆனால் வளர்ச்சி திட்டங்களுக்கு, குடிநீர் பஞ்சத்தை போக்கவும் ஒதுக்கப்பட்ட நிதியானது அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் குடும்ப உறுப்பினர்களாலும், வாரிசுகளாலும் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரு சொட்டு குடிநீருக்காக அலையவிட்ட ஆட்சியாளர்களை நீங்கள் ஒரு ஓட்டிற்காக அலைய வைக்க விட வேண்டும். 2017க்கு பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக குடிநீர் பஞ்சத்தை போக்க ஏராளமான திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
தற்போது வரை மாநில தலைநகரான லக்னோவில் மட்டும் சுமார் 8.7 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 1 லட்சம் வீடுகள் பாக்கி இருக்கின்றன. மீதமுள்ள வீடுகளுக்கும் விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இதேபால மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு இந்த வசதிகள் விரிவாக்கப்படும். தற்போது வரை பாஜக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மூலம் ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
அதேபோல மாநிலத்தின் புனிதத்தை பாதுகாக்க ஏராளமான பணிகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த புனித தலமான மா விந்தியவாசினி கோயிலை சுற்றி நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த புனித தலத்திற்கு அருகில் உள்ள ஜெட்டி அணையின் கட்டுமானங்கள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த அணையிலிருந்து வரும் நீர் வேளாண் தொழிலுக்கு மிகுந்த பலனளிக்கிறது. பாஜக ஆட்சியில்தான் இது சாத்தியமானது. வளர்ச்சிக்கு தடையாக இருந்த குடும்ப அரசியலை ஒழித்தது பாஜகதான்" என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications